கோவையில் அமையவிருக்கும் சர்வதேச தரத்திலான ஹாக்கி விளையாட்டு மைதானத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லோருக்கும் எல்லாமும் என்பதுதான் திராவிட மாடல் அரசு என்று கூறினார்.

இந்தியாவிலேயே புரட்சிகரமான மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், புதுமைப்பெண் திட்டம் மூலம் 3.5 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும், பட்டா என்பது ஆவணம் மட்டும் அல்ல, அது உங்களுக்கான நிலத்தின் மீதான உரிமை எனவும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: கோவையில் உதயநிதி ஸ்டாலின் ரோடு ஷோ..! செல்பி எடுத்து மக்கள் உற்சாகம்..!
இதையும் படிங்க: திமுக வெற்றியை அடித்து நொறுக்கிய அதிமுக..! என்எல்சி தொழிற்சங்க தேர்தலில் வேட்டு..!