பிப்ரவரி 25ம் தேதி பாஜக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக கோவையில் வந்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. அந்த விழாவில் அவர் சில கருத்துக்களை பதிவு செய்திருந்தார். அதில் முதன்மையாக இரண்டு கருத்துகளை தெள்ளத் தெளிவாக கூறியிருந்தார்.
ஹரியானா, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பாஜக எப்படி வெற்றி பெற்றதோ, அதைவிட இரண்டு மடங்கு அதிகமாக வாக்குகளைப் பெற்று 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை தோற்கடிக்க வேண்டும். பாஜகவின் பின்னால் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருகிறதோ, அவர்கள் ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்'' என்று கூறியிருந்தார். இதை, அவர் அரசியலுக்காகப் பேசவில்லை. அவர் எங்கு சென்றாலும் அவரது திட்டமிடுதல் மிகத் தெளிவாக இருக்கும் என்பதுதான் தற்போது வரை அவரை உற்று நோக்கி கவனித்துவரும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

இதற்கு முன்பு வரை, அமித் ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் சொல்லி நடத்திக்காட்டி கில்லியாக தனது செயல்பாடுகளை நிரூபித்து பெரும் சம்வங்களை செய்து இருக்கிறார். தற்போது அவர் தமிழகத்திற்கு வந்து சில, பல அரசியல் நகர்த்தல்களுக்கு பலமாகவே அடிப்போட்டுச் சென்று இருக்கிறார்.
இதையும் படிங்க: அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் இணைப்பா..? இப்படி சொல்லிட்டாரே அதிமுக மூத்த தலைவர்..!
2026-ல் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது மீண்டும் ஆட்சியைப் பிடித்தேஆக வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் திமுக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய அரசை பலமாக எதிர்க்கும் வகையில், இந்தித் திணிப்பு, கல்விநிதியை மத்திய அரசு வழங்கவில்லை' என உணர்வுப்பூர்வமான பிரச்னைகளை கிளப்பி வருகிறது. தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக விமர்சித்து வரும் கட்சிகளை பாஜகவின் பி டீம் என முத்திரை குத்தி வருகிறது.

மற்றொரு புறம், எடப்பாடி பழனிச்சாமி தனது தலைமையில் ஒரு கூட்டணியை கட்டி எழுப்ப வேண்டும் என்கிற முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமியோடு, அமித் ஷா பேச்சுவார்த்தை நடத்தி வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவோடு, அதிமுக கூட்டணியை உறுதி செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி மகன் மிதுனை டெல்லிக்கு அழைத்து, அமித்ஷா நேரடியாக பேசி முடித்ததாகவும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த அடிப்படையில் வருகிற 2026 சட்டமன்றத்தேர்தலில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி அமைத்து பயணிப்பதற்கான ஒரு களம் பேசி முடிக்கப்பட்டுவிட்டது. உண்மையிலேயே அமித்ஷா, கோவை வருகையின் பின்னால் இருக்கும் அரசியல் சூத்திரம் என்ன? அவரது அரசியல் ராஜதந்திரம் என்ன? என்கிற விஷயத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அதிமுக கூட்டணி தற்போது தேமுதிக மட்டுமே உள்ளது. பாமக இன்னும் சில கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றனவா? எனக் கூறாமல் அலைக்கழித்துக் கொண்டு இருக்கின்றன.

ஜி.கே.வாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பாஜகவுக்கான ஆதரவு தளத்தில் இருக்கின்றனர். இவர்களை எல்லாம் ஒரே கூட்டணியாக இணைக்கும் பட்சத்தில் இந்த கூட்டணி வலுவான ஒரு கூட்டணியாக மாறும் என கணக்கிட்டு இருக்கிறார் அமித் ஷா. இதன் அடிப்படையில் தான் இப்போது கூட்டணி பேசி முடிக்கப்பட்டு இருக்கிறது. அமித் ஷா இந்தக் கூட்டணியை உறுதி செய்துள்ள அதேவேளை, திமுகவின் கூட்டணி இருக்கும் கட்சிகளை உடைக்கும் அசைண்மெண்டையும் கூறிச் சென்றுள்ளார்.
திமுக கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிகளுக்கு விலகிச் சென்றாலும் திமுகவின் அடுத்த முதல்வராக அறியப்படக்கூடிய உதயநிதியின் பதவிக்கு பெரும் சிக்கல் வந்துவிடும். எனவே திமுக அந்த கூட்டணியில் உள்ள எந்த கட்சிகளையும் விட்டுவிடாமல் தொடர வேண்டும் என நினைக்கிறது. இந்த நிலையில், சீமானின் நாதக- வை மையப்படுத்திய ஒரு அரசியல் பார்வையும் இருக்கிறது. பெரியாருடைய கருத்துகளை, பெரியாரை வைத்து அரசியல் நடத்தி வரும் திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை இதுவரை தமிழகத்தில் எந்த கட்சிகளாலும் உடைக்க முடியவில்லை.

பலமுறை பாஜக அதற்கான முயற்சிகளை தமிழகத்தில் உள்ள அக்கட்சியின் தலைவர்களை வைத்து உடைக்க முயற்சி எடுத்திருக்கிறது. ஆனால், பெரியார் என்கிற அந்த பிம்பத்தை உடைக்க முடியவே இல்லை. ஆனால் பெரியார் என்ற பெயரையும், பெரியார் மையப்படுத்திய கருத்தியலையும் எதிர்த்து பலரும் தயங்கி வந்த நிலையில், தமிழகத்தில் பெரியார் கருத்துக்களை எதிர்த்து யாரும் அரசியல் செய்ய முடியாது என பலரும் தயங்கிய நிலையில், சீமான் தொடர்ச்சியாக பெரியாரையும், அவரது கருத்துக்களையும் உடைத்து மடை மாற்றிய பிறகு, இப்போது பெரியாரை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்கிற களம் உருவாகி விட்டது.
திமுகவிற்கு இது ஒரு எதிர்பாராத திருப்பமாகவே கருதப்படுகிறது. தற்போது கிடைத்திருக்கக்கூடிய ஒரு தகவல் உறுதியாகும் பட்சத்தில், மத்திய அரசு சீமானுக்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு கொடுப்பதற்கான முடிவை எடுத்திருக்கிறது. இம்மாதம் அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் அதற்கான அறிவிப்பு வரலாம். திமுகவுக்கு எதிரான கொந்தளிப்பு நிலையில் உள்ள சீமான், பாஜக அமைக்கக்கூடிய கூட்டணியில் இடம்பெற உள்ளது உறுதியாகி விட்டது.

தமிழகத்தில், தமிழ் உணர்வாளர்களாக இருக்கக்கூடிய வாக்குகளை சீமான் பிரிக்கக்கூடிய பட்சத்தில் இந்த வெற்றி இலகுவாக அமைந்துவிடும் என்கிற கணக்கையும் வைத்து பாஜக அதற்கான காய் நகர்த்தல்களை எடுத்துமுடித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் கட்சியை மையப்படுத்தி வரும் தகவல்களை நாம் இங்கே நிராகரிக்க முடியாது. அவரது கட்சி வெற்றி, தோல்விகளை நிர்ணயிக்கும் கட்சியாக மாறி வருகிறது.
விஜயின் செயல்பாடுகள் வேகம் கூடத் தொடங்கி இருக்கிறது. அவர் பின்னால் தொடர்கின்ற இளைஞர்கள் ஒரு மாற்றத்தை கட்டியமைப்பதற்கான எடுப்பார்கள் என்பதை உணர்ந்த பாஜக, தாம் ஏற்பாடு செய்யும் கூட்டணிக்குள் கொண்டு வர திரைமறைவாக காய்களை நகர்த்தி வருகிறது. தாங்கள் தனிமையில் போட்டியிடப்போகிறோம் என தவெக கூறி வருவதெல்லாம் சீட் பேரத்திற்கு மட்டுமே எனவும் அவர்கள் பாஜக முன்னின்று அடிக்கோலிடும் எப்போதே வந்து விட்டார் எனவும் கூறப்படுகிறது. விமர்சனங்கள் எழும் என்பதால், பாஜக விலகி நின்று மற்ற கட்சிகளை எல்லாம் கூட்டணிக்குள் இணைத்து விட்டு, இறுதியில் இந்த கூட்டணியில் இணையலாம் என்கிற நிலைப்பாட்டை எடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒருவேளை பாஜகவுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்தால், ஒதுங்கி நின்று தாம் திரைமறைவில் கட்டி எழுப்பும் அதிமுக-தவெக-பாமக-தேமுதிக- நாதக உள்ளிட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து வெற்றிபெற வைத்து திமுக-வை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்பதே அமித் ஷாவின் வைராக்கியத் திட்டம் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீதான ஆள்கடத்தல் வழக்கு.. 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க உத்தரவு..!