நிலவில் வடகிழக்குப் பகுதியான மார் கிரிஸியம் பகுதியில் ப்ளு கோஸ்ட் விண்கலம் தரையிறங்கி, புகைப்படங்களை அனுப்பியது. நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலங்களில் 3வது பெரிய விண்கலம் இதுவாகும். 2025, ஜனவரி 15ம் தேதி ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கான்9 ராக்கெட் மூலம் தனது பயணத்தை தொடங்கிய “ப்ளூ கோஸ்ட்” விண்கலம் மார்ச் 2ம்தேதி(இன்று) நிலவில் தரையிறங்கியுள்ளது. இந்த ப்ளூ கோஸ்ட் விண்கலத்தில் 10 வகையான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. நிலவின் மண் ஆய்வு செய்தல் கருவி, கதிர்வீச்சை கண்டறியும் கருவி, உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளுக்கான கருவிகள் இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

மார்ச் 16ம் தேதி வரும் பவுர்ணமியன்று நிலவின் முழுப்பகுதியை புகைப்படம் எடுக்கும் வகையில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மார்ச் 16ம் தேதி நிலவில் இருந்து சூரியன் அஸ்தமனத்தையும் புகைப்படம் எடுத்து அனுப்ப இருக்கிறது. 1972ம்ஆண்டு அப்பல்லோ 17 விண்கலத்துக்குப்பின், நிலவில் சாப்ட் லேண்டிங் செய்த தனியார் நிறுவனம் ஃபயர்ப்ளை ஏரோஸ்பேஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நிலவின் நீள்சுற்றுவட்டப்பாதையில் ஒரு மாதமாக வட்டமிட்ட ப்ளூகோஸ்ட் விண்கலம், நிலவை நோக்கி மெல்ல நகர்ந்தது, நிலவின் சுற்றுப்பாதைக்குள் மட்டும் 16 நாட்கள் சுற்றியது விண்கலம்.
இதையும் படிங்க: போர்ட்டர்களை நேரில் சந்தித்த ராகுல் நெகழ்ச்சி; இருளில் பிரகாசிக்கும் மனிதநேய ஒளி

நிலவில் வடகிழக்கில் உள்ள எரிமலைகள் நிரம்பியதாகக் கூறப்படும் மான்ஸ் லேட்டர்லைட் பகுதிதியில் தரையிறங்கி, பல்வேறு ஆய்வுகளை ப்ளூ கோஸ்ட் செய்ய இருக்கிறது. நிலவில் இருக்கும் வெப்பநிலையைக் கண்டறிய இந்த ப்ளூ கோஸ்ட் விண்கலம் உதவும், இதன் மூலம் நிலவில் வெப்ப பரிமாணம் குறித்து அறிவியல் வல்லுநர்களால் புரிந்துகொள்ள இயலும். நிலவின் காந்த சக்தி மற்றும் மின்சக்தி பகுதிகளையும் இந்த விண்கலம் ஆய்வு செய்கிறது. பூமியின் காந்த மண்டலத்தின் எக்ஸ்-கதிர் புகைப்படம் நமது பூமி குறித்த புதிய கண்ணோட்டங்களை வழங்கும். எதிர்காலத்தில் நிலவுக்கு செல்லும் பயணங்களை திட்டமிடுவதற்கும், நிலவில் மண் மேற்பரப்புகளுடன் எவ்வாறு ஒட்டிக்கொள்கிறது என்பதையும் ஆய்வு செய்யும்
இதையும் படிங்க: முடிவுக்கு வருகிறது ‘ஸ்கைப்’ பயணம்! 20 ஆண்டுகள் பயணித்து மே மாதத்துடன் நிறுத்தம்