''ஒவ்வொரு தேர்தலின் போதும் எனக்கு ஏற்படுகின்ற ஒரே சிக்கல் அவளைக் கூட்டி வந்து தெருமுனையில் நிற்க வைத்து கத்த விடுவார்கள்'' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ''காவலாளி அமல்ராஜை வெளியில் எடுக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அவரை அப்படியே விட்டுவிடுவோமா என்ன? அவரை தாக்கியது கொடுமையான செயல். தேவையற்றது. அநாகரீகத்தின் மிகப்பெரிய உச்சம். அவரை அடித்திருக்க வேண்டியதெல்லாம் இல்லை.

இரும்பு கம்பியில் துணியை சுற்றி அடித்ததெல்லாம் மிகவும் தவறு. இதற்கெல்லாம் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் இந்த சம்மனை கதவில் ஒட்டும் போது அவர்கள் தடுத்திருந்தால் பணி செய்ய விடாமல் தடுத்தார்கள் என்பது நியாயம். நீங்கள் ஒட்டி விட்டு போய்விட்டீர்கள். அதோடு உங்கள் வேலை முடிந்தது. அதன்பிறகு கிழிக்காமல் அதை கதவில் வைத்து தீபாதாரணை காட்டி, சாமியா கும்பிட முடியும்? சம்மன் என்பது படிக்க மட்டும்தான். என்னிடம் கூடத்தான் சம்மன் கொடுத்தீர்கள். நான் படித்துவிட்டு கிழித்து விட்டேன். அதற்காக கைது செய்வீர்களா?
இதையும் படிங்க: அப்பா ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து..! விசாரணைக்கு பின் சீமான் பேட்டி...!

நான் அமல்ராஜை சிறைக்குச் சென்று பார்க்கவில்லை. ஆனால் தம்பிகள் சொன்னார்கள். அவருக்கு ரொம்ப காயம் ஏற்பட்டிருக்கிறது. அடித்தார்கள் என்று என்று சொன்னார்கள். நேரடியாக காவல் நிலையத்திற்கு அவர்களை கொண்டு செல்லாமல், ஒரு திடலில் நிறுத்தி வண்டிக்குள் வைத்து அடித்திருக்கிறார்கள். அதைக் கேட்கும் போது எனக்கு மிகவும் வலித்தது. அதைப்பற்றி இப்போது நான் எதுவும் சொல்ல முடியாது. பதிலுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும். முதலில் அமல்ராஜை வெளியில் எடுக்க வேண்டும். அந்த பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் எனக்கு ஏற்படுகின்ற ஒரே சிக்கல் அவளைக் கூட்டி வந்து தெருமுனையில் நிற்க வைத்து கத்த விடுவார்கள். திமுகதான் அந்த வேலையை செய்யும். அதிலும் பெருமையோடு செய்யும். அதற்கு ஒரு கூட்டத்தை வைத்திருக்கிறது. வாடகைக்கு வீட்டை விடுவார்கள், கடையை விடுவார்கள், நிலத்தை விடுவார்கள், அவர்களுக்கு வாயை வாடகைக்கு விடுவது வாடிக்கையாகி விட்டது.

நான்தான் இந்த துயரத்தை முடித்து விடுவோம் என்று இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு கொண்டு போனேன். அந்த வழக்கு மறுபடியும் விசாரிக்க வேண்டும் என்று சொன்னதால் அது நீள்கிறது. பிறகுதான் வழியில்லாமல் உச்ச நீதிமன்றத்திற்கு இப்போது போயிருக்கிறோம். விரைவில் வழக்கு விசாரணை வருகிறது சரியாகிவிடும்'' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கருணாநிதி என்னை தலைவராக்கினார்... ஸ்டாலின் என்னை முதல்வராக்குவார்.. காவல் நிலையம் வெளியே சீமான் பஞ்ச்..!