மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைக் கண்டுபிடியுங்கள், பொருளாதாரக் கொள்கையில் முன்கணிப்பை மேம்படுத்தவும், வர்த்தகக் கொள்கையை முறைப்படுத்தவம் நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய அரசை காங்கிரஸ் கட்சி விளாசியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று வெளியிட் அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சர்வதேச செலவாணி நிதியம் (ஐஎம்எப்) அமைப்பு, இந்தியாவில் தனியார் முதலீடு அதிகரித்து வருகிறது என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆனால், உண்மையில் இந்தியாவில் தனியார் முதலீடு அளவு வரலாற்று சராசரியோடு ஒப்பிடுகையில் மந்தமாகவே இருக்கிறது.
இதையும் படிங்க: உலக வங்கி, சர்வதேச பண நிதியத்திலிருந்து அமெரிக்கா விலகினால் என்ன நடக்கும்..? விரிவான அலசல்..!

2021-22ல் தனியார் முதலீடு 21 சதவீதமாக இருந்த நிலையில் 2023-24ல் மோசமாகி 13 சதவீதமாகக் குறைந்துவிட்டது. குறிப்பாக எந்திரங்கள், சாதனங்கள் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடு கனிசமாகக் குறைந்துவிட்டது, ஜிடிபியில் தொடர்ந்து இதன் பங்கு குறைந்து வருகிறது.
ஜூலை-செப்டம்பர் 2024ம் ஆண்டில் உற்பத்தியில் திறன் பயன்பாடு 75.8% மட்டுமே எட்டியது என்றும், அடுத்த 6 மாதங்களுக்குள் தேவையை பூர்த்தி செய்ய உற்பத்தி திறன் போதுமானதாக இருக்கும் என்றும் பெரும்பாலான நிறுவனங்கள் எதிர்பார்த்ததாக IMF குறிப்பிடுகிறது.ஆனால், நுகர்வு வளர்ச்சி என்பது தொடர்ந்து குறைந்து வருகிறது.
நுகர்வோர்கள் கைகளில் போதுமான பணம் இல்லாமல் இருப்பதால், தேவைக்கு ஏற்றார்போல் பொருட்களையும், சேவைகளையும் அவர்களால் வாங்க முடியவில்லை. உற்பத்தி நிறுவனங்கள் தங்களால் ஏற்கெனவே இருக்கும் உற்பத்தி திறனையும் பயன்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே மேலும் முதலீடு செய்ய தயங்குகிறார்கள்.

இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு தொடர்ந்து குறைந்து வருகிறது என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 6.5 % இருந்தநிலையில் 2023ல் 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது.மோடி அரசாங்கத்தின் பொருத்தமற்ற வர்த்தகக் கொள்கை - சீனாவிற்கு சந்தையை திறந்துவிட்டுள்ளது. ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்பு பொருட்களை ஏற்றுமதி செய்யவும் வரிகாரணமாகவும் தயங்குகிறார்கள், சீனாவின் பொருட்கள் குவிப்பு காரணமாகஉள்நாட்டு நுகர்வு குறைந்து வருவதால் முதலீடு செய்யவும் தயங்குகிறார்கள்.
இந்தியாவில் சமீப ஆண்டுகளாக தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்பு குறைந்து வருவது குறித்து சுட்டிக்காட்டியுள்ளது. இதையே ஐஎம்எப் அமைப்பும் வலியுறுத்தி ஊதியம் பெறாத சுயதொழில், குடும்ப உறுப்பினர்கள் தொழிலாளர்களாக இருப்பது அதிகரித்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மக்களின் நுகர்வை அதிகரிக்க வழியைக் கண்டுபிடியுங்கள், பொருளாதாரக் கொள்கையில் முன்கணிப்பை மேம்படுத்தவும், வர்த்தகக் கொள்கையை முறைப்படுத்தவம் நடவடிக்கை எடுங்கள்.
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மகா சிவராத்திரி விழாவில் எல்லா விதிகளும் பின்பற்றப்படுகின்றன.... நீதிமன்றத்தில் சான்றளித்த தமிழக அரசு..!!