நாம் தமிழர் கட்சியின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரும், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அந்த கட்சியில் இருந்து அதிரடியாக விலகி உள்ளார்.
காளியம்மாளின் விலகல் குறித்து நீண்ட நாட்களாகவே சர்ச்சை எழுந்து வந்த நிலையில் அவர் வெளியிட்டுள்ள, அறிக்கையின் மூலம் கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தாய் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், என ஆரம்பித்த அந்த கடிதத்தில் இதுவரை இல்லாத கனத்தை இதயத்தோடு எழுதுகிறேன் கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கு மேலாக நேசித்து வந்தேன், இந்த ஆறு ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது.
இதையும் படிங்க: வேங்கையன் ஒத்தையில தான் வருவான்...! எவ்வளவு பேர் விலகினாலும் கெத்து காட்டும் சீமான்..!
அக்கா, தங்கை ஆகவும் அண்ணன், தம்பிகளாகவும்நீங்கள் கிடைத்ததையும் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். என காளியம்மாள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணம் வாழ்நாள் பயணம் ஆக அமையும் என நினைத்திருந்த தான் இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவிலும் நினைக்கவில்லை கடந்த ஆறு வருடங்களாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ,என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும் நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன் எனினும் காலத்தின் சூழல் உயிராக எண்ணி வழிநடத்த நாம் தமிழர் கட்சி என்னும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாமானிய குடும்பத்தில் பிறந்து இனத்துக்காக தமிழ் தேசிய களத்தில் ஓடிய என் மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பு வைத்து களமாடிய உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்தபோதும் என் மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும் நாங்கள் நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன்,தற்போது ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்து விட்டது எண்ணி வருந்துகிறேன்.

அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என நினைத்து அள்ளித் தெளிப்பவர்கள் மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அனைவரையும் அனைவருக்கும் நான் நன்றி கடமை பட்டவளாக இருப்பேன் என்றும் தமிழ் தேசியத்தை விதைக்கும் வழியில் என் பயணம் தொடரும் நன்றி வணக்கம் நாம் தமிழர், என தனது விலகல் கடிதத்தில் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக கட்சியிலிருந்து விலகப் போவதாக காளியம்மாள் குறித்த செய்திகள் தொடர்ந்து வந்த நிலையில் தற்போது அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: நாதகவில் சாதிய பாகுபாடு... கட்சியில் இருந்து விலகிய நிர்வாகி.. சீமான் மீது பகீர் குற்றச்சாட்டு..!