உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், போப் ஆண்டவர் என அன்புடன் அழைக்கப்படும் உலக கத்தோலிக்க கிறிஸ்தவ தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக மாறி இருக்கிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு இதேபோல் கவலைக்கிடமான சூழல் ஏற்பட்டு, சிகிச்சைக்கு பின் உடல் நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டது.

நீண்ட காலமாக ஆஸ்துமாவில் பாதிக்கப்பட்ட போப் ஆண்டவர் அதிக அளவு ஆக்ஸிஜன் தேவைப்படும் சுவாசக் கோளாறால் நேற்று அவருடைய உடல்நிலை மீண்டும் மோசம் அடைந்தது. நுரையீரல் தொற்று காரணமாக ஒரு வாரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் 88 வயதான போப் ஆண்டவருக்கு ரத்த சோகையுடன் தொடர்புடைய நிலை இருந்து வந்தது பரிசோதனைகள் மூலம் கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைதான நாகேந்திரன் உடல்நிலை.. ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு..!
அதைத் தொடர்ந்து அவருக்கு ரத்த மாற்றமும் செய்யப்பட்டது என்று போப் ஆண்டவரின் தலைமையகமான வத்தி கான் அறிவித்து இருக்கிறது.முன்னதாக இரவு முழுவதும் அவர் நன்றாக ஓய்வு எடுத்தார் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து விழிப்பு நிலையில் நேற்றையதை விட அதிக வலியுடன் இருந்தபோதிலும் நாள் முழுவதையும் நாற்காலியில் கழித்தார் புனித தந்தை போப்.

வெள்ளிக்கிழமை அன்று அவர் ஆபத்திலிருந்து இன்னமும் மீளவில்லை என்றும் போப் ஆண்டவர் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் செப்சிஸ் ஏற்படுவதாகும். இது நிமோனியாவின் சிக்கலால் ஏற்படக்கூடிய ரத்தத்தில் வரும் கடுமையான தொற்று என்றும் தெரிவித்தனர். சுவாசப் பிரச்சினைகள் மற்றும் வயது முதிர்ச்சியால் செப்சிஸில் இருந்து மீள்வது மிகவும் கடினம் என்று ரோம் ஜெமலி மருத்துவமனையின் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சரி ஜியோ அல்ஃபியாரி கூறியிருந்தார்.
ஆனால் அந்த கிருமிகள் ரத்த ஓட்டத்தில் நுழைவது உண்மையான ஆபத்தாக அமைந்து விடும் என்றும் அவர் கூறினார். நேற்று போப் ஆண்டவர் இல்லாமலே தனது புனித ஆண்டு கொண்டாட்டங்களை வத்திகுன் மேற்கொண்டது.

கத்தோலிக்க மதத்தின் கால் நூற்றாண்டு கொண்டாட்டமான வத்திகான் புனித ஆண்டின் தொடக்கத்தில் பிரான்சிஸ் நோய் வாய்ப்பட்டார். அவருக்கு பதிலாக புனித ஆண்டு அமைப்பாளர் ஞாயிற்றுக் கிழமை திருப்பலியை கொண்டாடுவார் என்று அறிவித்திருந்தது. மருத்துவ மனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது என்பது பற்றி தெளிவாக தற்போது கூற முடியாத நிலையில் டாக்டர்கள் உள்ளனர்.
அதைத்தொடர்ந்து. "போப் ஆண்டவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யலாமா? என்ற கேள்வி எழத் தொடங்கி இருக்கிறது. அதற்கு பதில் அளித்த பிரான்சிசின் சில கார்டினல்கள் "அவர் பதவி விலகுவதற்கான எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை; உண்மையில் போப்பின் பணி வாழ்நாள் முழுவதும்" என்பதை நினைவு படுத்தினார்.
இதையும் படிங்க: அதிபர் ட்ரம்பின் பரஸ்பர வரிவிதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கும்.. வேளாண் பொருட்களுக்கு அதிக வரி..!