2025 ஐபிஎல் சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை பெங்களூருவில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்த நிலையில் அதற்கு பழித்தீர்க்கும் விதமாக சிஎஸ்கே அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

மறுபுறம் ஆர்சிபி அணி தனது முதல் போட்டியில் அபார வெற்றியை பெற்று இருப்பதோடு அதன் பேட்டிங்கும் பலமாக இருப்பதால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர்கள் அவர்களை எப்படி சமாளிப்பார்களா என்று கேள்வியும் எழுந்துள்ளது. இதனிடையே இது குறித்து பேசிய சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் பேசுகையில், இரண்டு அணிகளுமே கடந்த ஆண்டு விட தற்போது வித்தியாசமாக இருக்கிறது.
இதையும் படிங்க: முதல் வெற்றியை பதிவு செய்தது லக்னோ அணி... 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!!

எனினும் நாங்கள் கடந்த ஆண்டில் நடந்த முடிவுகளை வைத்து எந்த ஒரு நகர்வையும் செய்வதில்லை. ஆனால் ஆர் சி பி அணியின் மிகப்பெரிய வீரராக விராட் கோலி இருக்கிறார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. விராட் கோலியையும் ரஜத் பட்டிதாரையும் நாங்கள் அமைதியாகிவிட்டால் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. விராட் கோலியை தவிர இம்முறை அவர்கள் பல பலமான வீரர்களை சேர்த்து இருக்கிறார்கள்.

ஆர் சி பி மட்டுமல்ல ஒட்டு மொத்த அணிகளும் தற்போது இப்படிதான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை தொடர் சரிசமமாக இருப்பதாக நான் நினைக்கின்றேன். பதிரானாவுக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் நாளைய போட்டியில் பங்கேற்க மாட்டார். ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டியில் பெரிய அளவில் எங்கள் அணியில் மாற்றம் இருக்காது என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இனி ஃபுல்டாஸ் பந்துதான்... அஸ்வின் அதிரடி!!