2025 ஐபிஎல் சீசனில் இன்று லக்னோ லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களம் இறங்கிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 6 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷனும் டக் அவுட்டாகி வெளியேறினார். அதிரடியாக விளையாடி வந்த டிராவிஸ் ஹெட் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிரின்ஸ் யாதவ் போட்ட பந்தில் போல்ட் ஆனார்.

இதை அடுத்து நிதிஷ் குமார் மற்றும் கிளாசன் ஆகியோர் ஜோடி சேர்ந்து தங்களது அணிக்காக ரன்களை குவித்தனர். இதில் ரவி பிஸ்னாய் ஓவரில் நிதீஷ்குமார் ரெட்டி 32 ரன்களில் வெளியேற ஹென்றிச் கிளாசன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது non ஸ்டிரைக்கரில் நின்று கொண்டிருந்த போது ரன் அவுட் ஆனார். இறுதியில் அன்கீத் யாதவ் 5 சிக்ஸர்களை விரட்டி 13 பந்துகளில் 36 ரன்களும் கேப்டன் கம்மின்ஸ் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசி நான்கு பந்துகளில் 18 ரன்களும் எடுக்க மற்ற வீரர்கள் தடுமாறினர்.
இதையும் படிங்க: இனி ஃபுல்டாஸ் பந்துதான்... அஸ்வின் அதிரடி!!

இதனால் சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது. இதை அடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ஐடன் மார்க்ராம் களமிறங்கினர். இதில் ஐடன் மார்க்ராம் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அபாரமாக ஆடினார். 26 பந்துகளில் 70 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

மறுபுறம் மிட்செல் மார்ஷ் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். இதை அடுத்து களமிறங்கிய ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து டேவிட் மில்லரும் அப்துல் சமத்தும் சேர்ந்து இலக்கை எட்டுவதற்கான ரன்களை குவித்து அணியை வெற்றி பெற செய்தனர். இதன் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: RR-ஐ கதறவிட்ட டி காக்… 8 விக்கெட் வித்தியாசத்தில் KKR வெற்றி!!