ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்ற இந்திய அணி வீரர்கள் கையில் கருப்பு பேட்ச் அணிந்து வந்து விளையாடினர். இதற்கு ரோஹித் சர்மாவை காங்கிரஸ் நிர்வாகி விமர்சித்ததே காரணம் என்ற தகவல் பகிரப்பட்டது. ஆனால், வீரர்களின் கருப்பு பேட்ச்க்கு காரணமே வேற என பிசிசிஐ விளக்கம் கொடுத்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. லீக் போட்டிகள் கடந்த 2ம் தேதியுடன் முடிந்தது. குரூப் ஏ பிரிவில் உள்ள இந்திய அணி அறையிறுதியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் அதீவிரமாக நடைபெற்றன. இன்று மதியம் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி ஃபீல்டிங் செய்ய தயாராகி வந்தது. அப்போது, இந்திய அணி வீரர்களின் இடது பக்க கையில் தோல்பட்டைக்கு கீழே ஒரு பட்டையிலான ஆன பேட்க் கட்டப்பட்டிருந்தது.

அனைத்து வீரர்களும் கருப்பு பட்டையை தனது கைகளில் கட்டியிருந்தனர். அதை பார்த்த பலரும் ரோஹித் சர்மா மீதான விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவே கருப்பு பட்டை அணிந்து இருப்பதாக கூறினர். இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை காங்கிரஸ் பெண் நிர்வாகி உருவக்கேலி செய்திருந்தார். காங்கிரஸ் பெண் நிர்வாகியான முகம்மது ஷமா, “ ரோஹித் உடல் பருமனாக உள்ளார். அவரது கோப்டன்ஷிப் மோசமானது. இந்திய அணிக்கு அவரது கேப்டன்ஷிப் ஜொலிப்பை தராது என தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. அரையிறுதியில் இந்தியாவை சாய்க்க ஆஸ்திரேலியா வியூகம்... சுழற்பந்து தாக்குதல் நடத்த திட்டம்!
ஷமாவின் பதிவு வைரலானதும் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் என பலரும் ரோஹித்க்கு ஆதரவாக கண்டனம் பதிவிட்டனர். பிசிசிஐ கண்டன பதிவை வெளியிட்டது. மதிப்பு மிக்க பொறுப்பில் இருக்கும் இந்திய கேப்டன் ரோஹித்தை உருவக்கேலி செய்வது துரதிர்ஷ்டவசமானது என பிசிசிஐ கூறி இருந்தது. இந்த கண்டன பதிவுகளை தொடர்ந்து ஷமா தனது பதிவை டெலிட் செய்தார்.

இந்த நிலையில் இன்று விளையாடும் இந்திய வீரர்கள் ரோஹித் விவகாரத்தில் கருப்பு பேட்ச் கட்டி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இது உண்மை இல்லை என பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது. அதாவது, நேற்று மும்பை மாநில கிரிக்கெட் வீரரான பத்மாகர் ஷிவால்கர் மறைந்துள்ளார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 589 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் இந்தியாவின் மிகச்சிறந்த சுழற் பந்து வீச்சாளராக இருந்தவர்.
இவரின் சுழற்பந்து வீச்சில் இந்திய அணிக்கு சிறப்பான ஐந்து வீரர்கள் கிடைத்தனர். ஆனால், இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு பத்மாகர் ஷிவால்கருக்கு கிடைக்கவில்லை. அவர் கிரிக்கெட்டுக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக இந்திய வீர்ர்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாடியதாக பிசிசிஐ கூறியுள்ளது.
இதையும் படிங்க: ரோஹித் சர்மா குண்டா இருக்காரு... அவரு கேப்டனாக இருப்பதே அசிங்கம் என்ற பிரபலம்!!