2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி கொல்கத்தா அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணியின் தொடக்கவீரர்களாக பிரியன்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரியன்ஷ் ஆர்யா 35 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

பிரப்சிம்ரன் சிங் 49 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழகக், பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 161 ரன்களை குவித்திருந்தது. இதை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் - மேக்ஸ்வெல் கூட்டணி நிதானமான ஆட்டத்தை ஆடி ரன்களை குவித்தது. மேக்ஸ்வெல் 7 ரன்களில் ஆட்டமிழக்க, யான்சன் களமிறக்கப்பட்டார். ஆனால் அவர் 7 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க: 70% வீரர்கள் CSK-வில் இருந்து நீக்கப்படுவார்கள்.. ரகசியத்தை போட்டுடைத்த ரெய்னா!!

இதனால் 19 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்திருந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் சேர்க்க, பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்தது. 202 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர்.

முதல் ஓவரை மார்கோ ஜான்சன் வீசினார். 2 பேட்ஸ்மேன்களும் தலா மூன்று பந்துகளை சந்தித்த நிலையில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 1 ரன்னும் சுனில் நரைன் 4 ரன்களும் குவித்தனர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் போது திடீரென மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டு மைதானம் உறைகளால் மூடப்பட்டது.
இதையும் படிங்க: இந்த டீம் தான் 2025 ஐபிஎல் கோப்பை வெல்லும்... யுவராஜ் சிங் ஆருடம்; ரசிகர்கள் ஷாக்!!