2025 ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.

இந்த போட்டியின் முடிவில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் நிக்கோலஸ் பூரான் முதலிடத்தில் உள்ளார். அவர் நான்கு போட்டிகளில் 201 ரன்களை குவித்துள்ளார். ஆகவே அவர் தற்போது அரஞ்சு தொப்பியை வைத்துள்ளார். இதனிடையே ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து நிக்கோலஸ் பூரான் சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆண்ட்ரே ரசல் முதலிடத்தில் உள்ளார்.
இதையும் படிங்க: ஆரஞ்சு & ஊதா நிற தொப்பி யாரிடம் இருக்கிறது? 20 போட்டிகள் முடித்த நிலையில் ஐபிஎல் 2025 ஒரு பார்வை!!

அவர் 1120 பந்துகளில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்திருந்தார். தற்போது நிக்கோலஸ் பூரன் 1198 பந்துகளில் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் வீரேந்தர் சேவாக் இருக்கிறார். அவர் 1211 பந்துகளில் 2000 ரன்களை எடுத்திருக்கிறார். கிறிஸ் கெயில் 1251 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டி இருக்கிறார். ரிஷப் பண்ட் 1306 பந்துகளிலும், மேக்ஸ்வெல் 1309 பந்துகளிலும் 2000 ஐபிஎல் ரன்களை எடுத்துள்ளனர்.

இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துவக்க வீரர்களான எய்டன் மார்கிரம் 28 பந்துகளில் 47 ரன்களும், மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 81 ரன்கள் குவித்தனர். மூன்றாம் வரிசையில் இறங்கிய நிக்கோலஸ் பூரன் அவர்கள் இருவரது அதிரடியையும் தாண்டினார். அவர் 36 பந்துகளில் 87 ரன்கள் சேர்த்தார். 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அபார பந்துவீச்சால் மும்பை அணியை வீழ்த்திய ஆர்.சி.பி... 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!