2024-25ம் ஆண்டு கிரிக்கெட் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இன்று வெளியிட்டது. இதில் கடந்த ஆண்டு ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் மீண்டும் சேர்க்கப்பட்டனர். இருவரும் உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதில்லை என்ற குற்றச்சாட்டு வந்ததையடுத்து, இருவரும் ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டனர்.

பின்னர், ரஞ்சிக் கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு உள்நாட்டுப் போட்டிகளில் இருவரும் பங்கேற்றனர். கடந்த ஆண்டு ஐபிஎல், நடப்பு சீசன் ஐபிஎல் தொடரிலும் இருவரும் சிறப்பாக செயல்படுவதால் ஒப்பந்தத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ஐபிஎல் டி20 திருவிழா இன்று ஆரம்பம்... பிசிசிஐ அறிவித்த 4 புதிய விதிகள் என்ன..?
டி20 போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா, ஜடேஜா, விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கான மத்திய ஒப்பந்தம் தொடருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் அவருக்கான ஏ பிளஸ்(A+) ஒப்பந்தம் தொடர்கிறது.

பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் மொத்தம் 4 பிரிவுகள் உள்ளன. ஏ பிளஸ், ஏ, பி, சி. ஏபிளஸ் பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியமும், ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியமும், பி பிரிவு வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடியும், சி பிரிவில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.ஒரு கோடியும் ஊதியம் வழங்கப்படும்.
தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி, வேகப்பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா, அபிஷேக் சர்மா ஆகியோருக்கு சி பிரிவில் ஒப்பந்தம்முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ மத்திய ஒப்பந்தம் வருமாறு...
ஏ பிளஸ் (A+)
ஏ பிளஸ் பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி ஊதியம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ரவீ்ந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் உள்ளனர்.
கிரேடு ஏ பிரிவு
கிரேடு ஏ பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி ஊதியம் வழங்கப்படும். இந்தப் பிரிவில் முகமது சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மான் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பந்த்

கிரே பி பிரிவு
கிரேடு பி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.3 கோடி ஊதியம் தரப்படும். இதில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஸர் படேல், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சூர்யகுமார் இன்னும் டி20 ஃபார்மெட் மட்டுமே விளையாடும் வீரராகக் கருதப்படுவதால், அவர் பி பிரிவிலேயே வைக்கப்பட்டுள்ளார். ஆனால், குல்தீப் யாதவ் டெஸ்ட் போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளில் விளையாடியும் அவர் ஏன் பி பிரிவில் வைக்கப்பட்டுள்ளார் எனத் தெரியவில்லை.

கிரேடு சி பிரிவு
கிரேடு சி பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டுக்கு ஒரு கோடி ஊதியம் தரப்படும். ரிங்குசிங், திலக்வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஸ்னாய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்ஸன், அர்ஸ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா,ரஜத் பட்டிதர், துருவ் ஜூரெல், சர்பிராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, அகாஷ் தீப், வருண் சக்ரவர்த்தி, ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறாத இந்திய அணி.. துணைப் பயிற்சியாளரை நீக்க BCCI முடிவு!!