மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. குவாலியரின் கோலா கா மந்திர் பகுதியில் வசித்து வருபவர், மகேஷ் குஜார். அவருடைய மகள், தனு (வயது 20.) தனுவும் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த பிகாம் விக்கி மாவாய் என்ற இளைஞரும் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள்.
இதற்கிடையில் தனுவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்வதற்கு அவருடைய தந்தை மகேஷ் ஏற்பாடு செய்திருந்தார். நாளை மறுநாள் சனிக்கிழமை அவர்களுடைய திருமணம் நடைபெறுவதாக இருந்தது.
மகளின் காதல் விவகாரம் ஏற்கனவே தந்தைக்கு தெரிந்திருந்தது. முதலில் அவர்களுடைய திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட தந்தை பின்னர் ஏனோ காதலனுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: திருமணம் முடிந்த கையோடு.. திருப்பதி கணவருடன் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து
பரபரப்பை ஏற்படுத்திய தனு வெளியிட்ட வீடியோ...

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அன்று திருமணத்துக்கு தந்தை ஒப்புக் கொள்ளாததை குறிப்பிட்டு, வீடியோ ஒன்றை தனு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இருந்தார். 52 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோ மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.
அந்த வீடியோவில், தனது குடும்பத்தினர் அவருடைய விருப்பத்திற்கு மாறாக வேறு ஒரு மாப்பிள்ளையை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தி திருமண தேதியை முடிவு செய்திருப்பதாக தனு கூறியிருந்தார். தனது தந்தை மற்றும் உறவினர் ஒருவர் பெயரையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டு, தனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு தனது குடும்பத்தினர் தான் காரணம் என்றும் வீடியோவில் அவர் பேசியிருந்தார்.
வீடியோ வைரல் ஆனதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தரம் வீர்சிங் அதிகாரிகளுடன் மகேஷ் குமார் வீட்டிற்கு விரைந்து சென்றார். மகேஷ் குமார் குடும்பத்தினருடன் இந்த விவகாரத்தில் சமரசம் செய்வதற்கு அவர் முயற்சி மேற்கொண்டார். உறவினர்கள் மற்றும் பஞ்சாயத்தாரம் அப்போது அங்கு உடன் இருந்தனர்.
இந்த பேச்சுவார்த்தையின் போது தனது வீட்டில் தொடர்ந்துதங்க மறுத்துவிட்ட தனு, அரசு நடத்தும் மகளிர் பாதுகாப்பு இல்லத்தில் தன்னை சேர்த்து விடும்படி போலீசாரிடம் மன்றாடினார். உடனே குறிப்பிட்ட மகேஷ் குமார் தனது மகளிடம் தனியாக பேசிப் பார்ப்பதாக கூறி தனுவை தனியாகஅழைத்துச் சென்றார். சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடித்த சத்தமும் தனுவின் அலறலும் கேட்டதால் போலீசாரும் குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அருகில் சென்று பார்த்த போது துப்பாக்கி கொண்டு விழா துளைத்த காயங்களுடன், அந்த இடத்திலேயே தனு துடிதுடித்து இறந்தது நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. தனியாக பேச வேண்டுமென்று மகளை அழைத்துச் சென்ற மகேஷ் குமார், தனுடன் நாட்டு துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்துச் சென்று இருக்கிறார்.
உறவினர் ராகுல் என்பவரும் அவர்களுடன் சென்றிருக்கிறார். காதலனைத் தான் மணப்பெண் என்று மகள் பிடிவாதமாக கூறியதும் ஆத்திரம் அடைந்த மகேஷ் குமார் மகள் என்றும் பாராமல் தனுவை அருகில் இருந்து நெஞ்சை குறி வைத்து சுட்டு இருக்கிறார். உறவினர் ராகுல் தனுவின் நெற்றியில் துப்பாக்கியால் சுட்டதும் விசாரணையில் தெரிய வந்தது.
உடனடியாக தனுவை துப்பாக்கியால் சுட்ட தந்தை மற்றும் உறவினர்கள் இருவரையும் போலீசார் மடக்கி பிடிக்க முயன்றனர். தந்தையை அவர்கள் கைது செய்தனர். உறவினர் ராகுல் தப்பி ஓடிவிட்டார். அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகளை கைப்பற்றி போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். தனுவின் சமூக வலைத்தள பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படிங்க: 8 மாதத்தில் கசந்த திருமணம் ..கணவரின் கொடுமை.. கர்ப்பிணி எடுத்த விபரீத முடிவு