தவெகவில் ஆதவ் அர்ஜூனா இணைந்துள்ளது விசிகவுக்கு கிலியை ஏற்படுத்தி உள்ளது. விசிகவில் உள்ள இளைஞர்கள் தற்போது தவெக பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளது விசிக கட்சி நிர்வாகிகளை புருவம் உயர்த்திப் பார்க்கிறார்கள்.
ஆதவ் அர்ஜூனா தவெகவில் இணைந்தது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, ''மரியாதைஇக்குரிய ஆதவ் அர்ஜூனா அவர்கள் தவெகவில் தேர்தல் பிரிவு பொதுச்செயலாளராக பொறுப்பேற்று இருப்பது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் எங்கிருந்தாலும் தனது களப்பணியை சிறப்பாக செய்வார் என நான் நம்புகின்றேன்.னென்றால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் அவர் துணைப்பொது செயலாளராக இருந்தபோது அவரது களப்பணியும் சிறப்பாகவே இருந்தது…

இங்கே இருந்தபோது தலித் முதல்வராக வேண்டும் என்கிற கோரிக்கையை அவர் வலுவாக வைத்தார். அதே கோரிக்கையை தமிழக வெற்றிக் கழகத்திலும் அவர் எழுப்புவார் என நான் நம்புகின்றேன். ஏனென்றால் தலித் முதல்வராக வேண்டும் என்ற கோரிக்கையைத் தான் அவர் வலுவாக வைத்திருந்தார். அதே கோரிக்கையை தவெகவிலும் வைத்தே தேர்தல் களத்தில் முன் வைப்பார் என நான் நம்புகிறேன். அது அவரது கோட்பாடு என்று சொல்லி இருந்தார். ஆகவே அவர் அதைச் செய்வார் என நம்புகிறேன்'' என வன்னியரசு கேட்டுக் கொண்டுள்ளார். இவரது பேச்சும் கூட ஆதவ் அர்ஜூனா தலித் சார்ந்து இயக்குபவராகவே காட்டியுள்ளது.
இதையும் படிங்க: சூடு கிளப்பும் தவெக… இணைந்த அன்றே ஆதவ்-நிர்மலுக்கு முக்கியப்பதவி… காளியம்மாள் இடத்தை தட்டிச்சென்ற யூடியூபர்..!
விசிகவின் இளைஞர் பட்டாளம் தவெகவை நோக்கி திரும்பி இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. அதற்கும் காரணம் ஆதவ் அர்ஜூனா. இதுகுறித்து விசிகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனாவின் அனுதாபிகள் கூறுகையில், ''விஜய் மாநாட்டிற்கு பெரும்பாலான மக்கள் விசிக ஆதரவு கூட்டங்களில் இருந்து தான் அனைத்து ஊர்களில் இருந்து சென்றார்கள். இதை அறிந்து கொண்டு தான் ரவிக்குமார், வன்னியரசு என தொடங்கி திருமாவளவன் வரை கொந்தளிப்பில் விஜயை தூற்றிப் பேசினார்கள்.

விசிகவின் பெரும்பாலான தொண்டர்களின் குரலாக திமுகவுக்கு எதிராக தங்களது உரிமைகளை பேசும் முகமாக ஆதவ் அர்ஜுனாவை விசிக தொண்டர்கள் போற்றி கொண்டாடினார்கள். வழக்கம்போல் அறிவாலயத்திற்கு அடிமையாக இருப்பதையே ஒப்பந்தம் (இடைநீக்கம்) போட ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து வெளியேறினார்.
ஏற்கனவே விஜயின் திரை வெளிச்சம், அம்பேத்கரை தனது கட்சிகொள்கை தலைவர், அதிகாரத்தில் இடம் என பேசியபோது அனைத்து புருவங்களும் திருமாவளவனை நோக்கி சென்றது.இப்பொழுது ஆதவ் அர்ஜுனா தவெகவுக்கு சென்றது முதலில் அறிவாலய விசுவாசி திருமாவளவன் அதிர்ச்சியில் உறைந்து இருப்பார்.

எத்தனை நாள் தான் அந்த மக்கள் இந்த திமுக ஆதரவாளர்களை நம்பி ஏமாந்து போவார்கள். சேதாரம் பெறும் சேதாரமாக தான் இருக்கப் போகிறது.திமுகவிற்கு பிரச்சனை என்றால் முதல் ஆளாக கூச்சலிடும் ரவிக்குமார், ஆளூர் ஷாநவாஷ், பாலாஜி, வன்னியரசு போன்றவர்கள் வேங்கைவயல் தலித் மக்கள் திமுக அரசின் காவல்துறையால் கைது செய்ததை பார்த்து இத்தனை நாளாகியும் சிறு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை எனில் யார் இவர்கள்? ஆனால் அந்த விவகாரத்தில் குரல் கொடுத்தவர் விஜய். அவருடன் அம்பேத்கரின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஆதவ் அர்ஜுனாவும் கைகோர்த்திருப்பது பட்டியலின சமுதாய இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது தவெக'' என்கிறார்கள்.
இதையும் படிங்க: #BREAKING தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார்; கெத்துக் காட்டிய விஜய்!