தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறையில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவரான நாகார்ஜுனா இன்று பிரதமர் மோடியை தனது குடும்பத்தினருடன் சென்று பார்த்து வாழ்த்து பெற்றுள்ளார். அக்கினேனி நாகார்ஜுனா என்று அழைக்கப்படும் ஆந்திர திரைப்பட துறையின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் ஆவார்.
அக்கினேனி நாகேஸ்வரராவ் மற்றும் அன்னபூர்ணா தம்பதியின் மகனான நாகார்ஜுனா, மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தில் பிறந்தவராவார். இவர் நடிகை அமலாவை திருமணம் செய்து ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். நாகர்ஜுனாவின் முதல் மனைவி லட்சுமிக்கு நாக சைதன்யா என்ற மகனும் நாகார்ஜுனா அமலா தம்பதியினருக்கு அகில் என்ற மகனும் உள்ளனர். இருவரும் பிரபலமான நடிகர்கள் ஆவர். நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாகச்செய்தன்யா முதலில் பிரபல நடிகை சமந்தாவை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்தார் தற்போது பிரபல மாடலான சோபியாவை அவர் திருமணம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தான் நாகார்ஜுனா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து பிரதமர் மோடியை இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து தனது தந்தை பெற்றுள்ள விருதுக்கு ஆசி வாங்குவதற்காக சென்றுள்ளனர். நாகார்ஜுனா குடும்பத்தினர் மற்றும் அவரது சம்மந்தி மற்றும் உறவினர்கள் என பத்திற்கும் மேற்பட்டோர் பிரதமரை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் அவர்களை பிரதமர் நன்கு உபசரித்து அனுப்பியதாக தெரிகிறது.
இதையும் படிங்க: இந்தியாவின் 31 முதல்வர்களில் 14 பேர் பாஜக..! கூடும் காவி கணக்கு
நாகர்ஜுனா குடும்பத்தினர் பிரதமருக்கு ஆந்திராவின் மிகப் பிரபலமான தெனாலி பொம்மைகளை வழங்கியதாக தெரிகிறது. பிரதமருடனான இந்த சந்திப்பு குறித்து நாகார்ஜுனா கூறும் போது...நாடாளுமன்ற வளாகத்தில் இன்றைய சந்திப்பில் மாண்புமிகு பிரதமர் @narendramodi ஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

பத்ம பூஷண் விருது பெற்ற டாக்டர் யார்லகட்டா லட்சுமி பிரசாத்தின் 'அக்கினேனி கா விராட் வியக்தித்வா' விருதை வழங்குவது ஒரு மரியாதை ஆகும். இது எனது தந்தை ANR காருவின் சினிமா பாரம்பரியத்திற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உள்ளது. அவரது வாழ்க்கைப் பணிக்கான உங்கள் அங்கீகாரம் எங்கள் குடும்பத்தினர், ரசிகர்கள் மற்றும் இந்திய திரைப்பட ஆர்வலர்களுக்கு ஒரு பொக்கிஷமான உறுதிமொழியாகும். இந்த வாய்ப்புக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
என தனது சமூக வலைதள பக்கத்தில் நாகர்ஜுனா பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்
இதையும் படிங்க: தட்டித் தூக்கும் பாஜக… துடைப்பத்தை தூக்கி எறிந்த டெல்லி மக்கள்… முடிவுக்கு வந்தது கெஜ்ரிவாலின் அத்தியாயம்..!