நேச்சுரல் ஸ்டார் நானி நடிக்கும் ரா ஸ்கிரிப்ட் கொண்ட 'தி பேரடைஸ்' பேரடைஸ் படத்தின் பிரத்யேக காட்சி வெளியாகியுள்ளது. நானி தன்னுடைய இயல்பான நடிப்பில் இருந்து விலகி கரடு முரடான கிராமிய கேரக்டர்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அண்மையில் நானி நடிப்பில் வெளி வந்த தசரா படம் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. அதில் ஆக்ஷன் காட்சிகளில் நானி அசத்தி இருப்பார். தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் காட்சிகளிலும், யாருமே கையில் எடுக்காத வித்யாசமான ரா ஸ்கிரிப்ட் கொண்ட கதைகளை தேர்வு செய்வதில் நானி ஆர்வம் காட்டி வருகிறார்.
அந்த வகையில் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரமாண்ட படத்தில் நானி இணைந்துள்ளார். சுதாகர் செருகுரி தயாரிக்கும் இப்படத்துக்கு 'தி பேரடைஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. இதில் நானி இதற்கு முன் ஏற்றிராத தைரியமான, மிக வலிமையான கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில் தி பேரடைஸ் படத்தின் 'ரா ஸ்டேட்மென்ட்' எனும் பெயரில் பிரத்யேக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதின் தொடக்கத்திலேயே 'ரா - RAW' என்ற சொல் ஏன் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு காரணம் படத்தில் மொழி, கதை, பின்னணி ஆகியவை கரடு முரடானவை என்பதையே காட்டுகிறது. சில காட்சிகள் பொறுப்புதுறப்பு போட்டு தொடங்குகிறது. அசலான உண்மை, அசலான மொழி என தொடங்கும் வீடியோவில், '' வரலாற்றில் எல்லோரும் கிளிகள் மற்றும் புறாக்களை பற்றி எழுதி இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: மீண்டும் எண்ட்ரி கொடுக்கும் சமந்தா...இப்படியா என வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்!!
ஆனால் அதே இனத்தில் பிறந்த காகங்களைப் பற்றி யாரும் இதுவரை எழுதியதில்லை. பசியால் வயிறு எரிந்த காகங்களின் கதை இது. பல காலமாக நடந்து வரும் சடலங்களின் அழுகைகள், தாயின் மார்பிலிருந்து பாலில் அல்ல. ரத்தத்தில் எழுப்பப்பட்ட ஒரு சமூகத்தின் கதை.
ஒரு தீப்பொறி பற்ற வைக்கப்பட்டு, முழு சமூகத்தையும் உற்சாகத்தால் நிரப்பியது. ஒரு காலகட்டத்தில் இழிவுபடுத்தப்பட்ட காகங்கள் இப்போது தங்கள் கைகளில் கூரிய வாள்களை வைத்திருக்கின்றன. அந்த காகங்களை ஒன்றிணைத்த ஒரு கலகக்கார இளைஞனின் கதை இது. அந்த இளைஞன் ஒரு தலைவராக மாறிய கதை...'' என அந்த குரல் விவரிக்கிறது.

தொடக்கக் காட்சியில் இறந்த உடல்களால் சிதறடிக்கப்பட்ட சேரிகளையும், அதன் மேலே அச்சுறுத்தும் விதமாக காகங்கள் பறப்பதையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னர் ஒரு மிகப்பெரிய வெடிப்பிற்குள் நானியின் எண்ட்ரி தொடங்குகிறது. காலணிகளில் கட்டப்பட்ட கை கடிகாரம், தண்ணீரிலிருந்து இழுக்கப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, கரடு முரடான தோற்றம் இந்த படம் நானிக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றே பார்க்கப்படுகிறது.
படத்தில் நானி உயிரை கொடுத்து நடித்திருந்தாலும் படத்தில் இருக்கும் சில தகாத வார்த்தைகள் சென்சார் தணிக்கை குழுவால் கட்டுப்படுத்தக் கூடும் என்றே கூறப்படுகிறது. இந்த படத்துக்கு ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார், 'ராக் ஸ்டார்' அனிருத் இசையமைக்கிறார்.
இதையும் படிங்க: இந்தியாவின் முதல் கடல் பேய் படம் "கிங்ஸ்டன்"... ட்ரெய்லரை வெளியிட்ட சிவகார்த்திகேயன்..!