அய்யா வைகுண்ட ஜெயந்தி என்பது தமிழ் மாதமான மாசியின் 20 வது நாளில் அய்யாவழி பின்பற்றுபவர்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா. பகவான் நாராயணனே இவ்வுலக மக்களின் மேன்மைக்காக 10வது அவதாரமாக திருச்செந்தூர் கடலில் மகர கருவறையில் அரூபமாய் ஆதிநாராயணருக்கும் திருமகள் மகாலெட்சுமிக்கும் மகனாக வைகுண்டராக அவதரித்தார் என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோவில் வளாகத்தில் அய்யா கோவில் கட்டப்பட்டுள்ளது.
அய்யா கோவிலில் வழிபாடு மேற்கொள்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சனை ஏற்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி வழிபாடு மேற்கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “இன்னம் ஐந்தே வருஷத்துல...” நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்நியூஸ்...!

அய்யா கோவிலில் இரு தரப்பும் வழிபாடும் மேற்கொள்ள தடையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே,சொக்கலிங்க சுவாமி கோவில் வளாகத்திற்கு வெளியே அன்னதானம் வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அய்யா வைகுண்டரின் 193வது அவதார தின விழாவில் சப்பர ஊர்வலம் நடைபெற்றது. எனினும் அய்யா கோவில் உள்ளே அன்னதானம், சமையல் மேற்கொள்ள அனுமதி கோரப்பட்டது. இதனை காவல்துறை மறுத்ததை தொடர்ந்து பக்தர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: “இருட்டுக்கடை அல்வா சாப்பிட நேரமிருக்கு... இது மட்டும் முடியாதா?”... முதல்வருக்கு எதிராக கொதித்தெழுந்த மாஞ்சோலைத் தோட்ட தொழிலாளர்கள்!