இந்தியாவை இந்து பாகிஸ்தான் ஆக பாஜக மாற்றி வருகிறது. இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே வகுப்புவாத மோதல்களை தூண்டிவிடுகிறது என்று உத்தவ் சிவசேனா கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் அந்தக் கட்சியின் நாளேடான சாம்னாவில் குற்றம்சாட்டியுள்ளார்.

உத்தவ் சிவசேனா கட்சியின் இதழான சாம்னா-வில் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் ராவத் எழுதியிருப்பதாவது:
மதத்தை அடிப்படையாக வைத்து கட்டமைக்கப்பட்ட நாடுகள் உருக்குலைந்துவிட்டன, அதில் பாகிஸ்தானும் ஒன்று. இந்த பாரத தேசம் இன்னும் நிலைத்திருக்கிறது. காரணம் என்னவென்றால், பண்டிட் நேரு போன்ரவர்கள் இந்த தேசத்தை இந்து பாகிஸ்தானாக மாற்ற அனுமதிக்கவில்லை. ஆனால், மோடியின் ஆட்சிக்காலத்தில் இந்த தேசம் புதிய பிளவுக்குத் தள்ளப்படுகிறது. நாம் இந்து பாகிஸ்தானை நோக்கி செல்கிறோமா என்ற கேள்வி எழுகிறது. இந்த தேசம் இந்து பாகிஸ்தானை நோக்கிதான் செல்கிறது.
இதையும் படிங்க: 2049-ல் இந்தியாவின் எழுச்சி உலகத்தையே மாற்றும்... பிரபல சீன ஆய்வாளர் கணிப்பு..!
முஸ்லிம்களுக்கு எதிராக தொடர்ந்து பல வன்முறைகள் நடந்துள்ளன. இறைச்சிக்கான மல்கர் சான்றிதழ் விவகாரம், அவுரங்கசீப் கல்லறை குறித்து பாஜக பிரதிநிதிகள் பேச்சு, மசூதிகள் முன் ஊர்வலங்கள் செல்லுதல், சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கொண்டாடுவது என பலவற்றைக் குறிப்பிடலாம்.
இந்த விஷம் தொடர்ந்து பரப்பப்பட்டுவந்தால், இந்தியா விரைவாக இந்து பாகிஸ்தானாக மாறுவது அதிகரிக்கும். இவை அனைத்தும் முஸ்லிம் சமூகத்தின் மீது வெறுப்பையும் வெறுப்பையும் மக்களின் மனதில் உருவாக்கி, நாட்டின் சமூக மற்றும் தேசிய ஓட்டத்தை நஞ்சாக்கிவிடும்.
இரு தேசக் கோட்பாட்டை பல தலைவர்கள் ஊக்குவித்த போதிலும், பண்டிட் நேரு வார்த்தையான “ இந்தியாவின் அரசியலமைப்பு மதச்சார்பற்றதாக இருக்கும், இல்லையெனில் அது 'இந்து பாகிஸ்தான்' ஆகிவிடும் என்று எச்சரித்தார். தேர்தல் நேரத்தில் பிரதமர் மோடியின் மங்கலசூத்ரா(தாலிக்கயிறு) குறித்து பேசிவிட்டு, முஸ்லிம் நாடுகள் அவரை நோக்கி வந்தவுடன் அவரின் செயல்பாடுகள் அனுகுமுறை மாறிவிடும்.

உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் முஸ்லி்ம்களுக்கு எதிராக என்கவுண்ட்டர் கொலைகளை செய்து வருகிறார். முஸ்லிம் மாபியா மற்றும் குண்டர்களுக்கு இடையே உத்தரப்பிரதேசத்தில் என்கவுண்ட்டர் நடக்கிறது. இதில் யோகி ஆதித்யநாத் சமூகத்தைச் சேர்ந்த குண்டர்கள், மாபியாக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது அதாவது இந்து மாபியாக்கள் பாஜக ஆளும் மாநிலங்களில் சுதந்திரமாக இந்துக்களிடம் கொள்ளையடிக்கலாம்.
சுதந்திரப்போராட்டத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எண்ணற்ற தியாகிகள் அந்தமான் தீவில் இருட்டுச்சிறைகளில் சிறைவாசம் அனுபவித்துள்ளனர், அங்கியே பலரும் உயிரிழந்துள்ளனர், ஆங்கிலேயர்களால் முஸ்லிம்கள் சுதந்திரப்போராட்ட வீரர்கள் கொடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் சுதந்திரப் போராட்டத்துக்கும்,இந்தியா உருவாக்கத்துக்கும் எந்தவிதமான பங்களிப்பும் செய்யாதவர்கள், தாழ்வுமனப்பாண்மை கொண்டு இந்து தேசம், முஸ்லிம் நாடு குறித்துப் பேசுகிறார்கள். இந்த திட்டம் அழிக்கப்பட வேண்டும்.

அவுரங்கசீப் ஆட்சி குறித்து இன்று எதிர்க்கட்சிகளும், ஆளும் பாஜகவினரும் பல்வேறு கருத்துக்களைப் பேசுகிறார்கள். ஆனால், மராத்திய பேரரசர் சிவாஜியின்ஆட்சிக் காலத்தில் எண்ணற்ற முஸ்லிம்கள் அவரிடம் பணியாற்றியுள்ளனர். ஆனால், வரலாற்று சம்பவங்களை பாஜக உண்மைக்குப்புறமாக தீவரப்படுத்தி காண்பிக்கிறது.
ஆக்ராவில் அவுரங்கசீப் வீட்டில் சிவாஜி மகாராஜா வீட்டுச்சிறையில் இருந்தபோது அவருக்கு உதவி தப்பிக்க வைத்தது மதாரி மேத்தார் என்ற முஸ்லிம்பெண்தான். சத்ரபதி சிவாஜியின் ரகசிய உளவாளியாக இருந்தது ஹைதர் அலி என்ற முஸ்லிம், அவரின் உயர் ஆலோசகராக இருந்தது இப்ராஹிம் கான். சிவராஜி மகராஜா ஒருபோதும் தனது ஆட்சியில் மதபேதம் பார்க்கவில்லை. அனைத்து மொழிகளையும் அவர் மதித்தார். ஆனால் இன்று சிவாஜியை குறிப்பிட்ட மதத்துக்குள் அடைத்து வைத்துள்ளது தேசிய பாவமாக இருக்கிறது.
சிவாஜி மகாராஜாவைப் பின்பற்றி, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வன்முறை எண்ணம் கொண்டவர்களை அமைச்சரவையில் இருந்து விலக்கி வைக்க வேண்டும். அவுரங்கசீப் கல்லறையை பூண்டோடு அழிக்க வேண்டும் என சிலர் விரும்புகிறார்கள். ஆனால், மகாராஷ்டிராவில் இந்து பாகிஸ்தானியர்கள் சேர்ந்து இந்து அவுரங்கசீப்பை உருவாக்குகிறார்கள். கல்லறையில் இருக்கும் அவுரங்கசீப்பைவிட அவர்கள் கொடூரமானவர்கள்.
இவ்வாறு சாம்னாவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாணவிகளை விடாமல் துரத்திய கும்பல்... ஹோலி பண்டிகையில் நடந்த சோகம்!!