ரசிகர்களுக்கு பொழுது போக்கு என்றாலே அது சினிமாதான். எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் வார இறுதியில் ஒருபடத்தையாவது தியேட்டருக்கு சென்று பார்த்தால் தான் தூக்கமே வரும் என்று சொல்லும் பல சினிமாவின் தீவிர ரசிகர்களை நம்மால் பார்க்க முடியும். அவர்களுக்காவே மாதம் தவறாமல் இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்னும் பல படங்கள் வெளியிடப்படாமல் பலவருடங்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ரீரிலீஸ் என பல படங்களும், ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் படங்களும் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்பொழுது நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில், இந்த வருடத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 11 ஹிட் படங்கள் வெளியாக போகிறது. அதில் முதலாவதாக பைவ் ஸ்டார் மற்றும் டுவைன் நிறுவனங்கள் தயாரிப்பில் இளையராஜா கலியபெருமாள் எழுத்து இயக்கத்தில் கே.எஸ் சுந்தரமூர்த்தி இசையில், சிபி சத்யராஜ் நடிப்பில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி வெளியாக உள்ள ஆக்ஷன் கலந்த க்ரைம் திரில்லர் திரைப்படம் தான் "டென் ஹவர்ஸ்". இந்த படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர்.
இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான 5 படங்கள்..! ஒரே நாளில் இத்தனை படங்களா..! ரசிகர்கள் ஆரவாரம்..!

கேங்கர்ஸ் - குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் தான் கேங்கர்ஸ். இத்திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

ரெட்ரோ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் தான் 'ரெட்ரோ.' இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வரும் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

டூரிஸ்ட் ஃபேமிலி - நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோரின் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் அழகான கதை சொல்லல் ஆகியவற்றை உறுதிபடுத்தும் படம் தான் "டூரிஸ்ட் ஃபேமிலி". இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப காமெடி டிராமா கதையாக பார்க்கப்படுகிறது. இந்த படமும் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல் - கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த விலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியானது அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.

மாமன் - லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் தான் 'மாமன்'. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரியை பாராட்ட சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இப்படம் நடிகர் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துடன் மே 16ல் ரிலீஸ் ஆகி நேரடியாக மோத உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

குபேரா - ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது குபேரா திரைப்படம். இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 20ம் தேதி வெளியாக உள்ள நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கும் குபேரா படம் ஜீன் 20ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்.

மாரீசன் - தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சுதீஷ் ஷங்கர் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அதிரடி - திரில்லர் திரைப்படம் தான் மாரீசன். இப்படத்தினை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் ஜீலை 25ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்.

கூலி - நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் படம் தான் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் நடிகர் ரஜினியின் 171வது திரைப்படம் தான் கூலி இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் உள்ள நிலையில் சுதந்திர தினத்தின் முந்தைய நாளான ஆகஸ்ட் 14ம் தேதி இப்படம் அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்.

மதராஸி - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரிப்பில், அனிரூத் இசையில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் "மதராஸி". இப்படம் ஆசிரியர்கள் தினமான செப்டம்பர் 5ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகும்.

இட்லி கடை - தனுஷ் இயக்கத்தில் 4 வது படமாக 'இட்லி கடை' என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இது தனுஷின் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் முதலில் ஏப்ரல் மாதம் 10 தேதி வெளியாகும் என்ற நிலையில் தற்பொழுது அக்டோபர் 1ம் தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.

அனைத்து திரைப்படங்களையும் மாதம் தவறாமல் கண்டு மகிழுங்கள்.
இதையும் படிங்க: எந்தெந்த ஓடிடியில் எந்தெந்த படங்கள் ரிலீஸ் தெரியுமா..?