நட்சத்திர நடிகைகளில் ஒருவரான 'அதுல்யாரவி' ஆரம்பத்தில் கிராமத்து பெண்ணாக தோற்றமளித்தாலும் சினிமா அவரை கவர்ச்சி நாயகியாகவே மாற்றி உள்ளது. அதே போல், பார்க்க அழகாக இருக்கும் அதுல்யா, சேலையில் கூட கவர்ச்சியாக தான் தெரிகிறார். இதுவரை நடிப்பிற்கு ரசிகர்கள் வைத்திருப்பவர்களை பார்த்திருக்க முடியும், அழகுக்கும் ரசிகர்கள் உள்ளவர்களை பார்த்திருக்க முடியும், ஆனால் கவர்ச்சிக்கு ரசிகர்களை திரளாய் வைத்திருப்பவர் என்கிறால் அது அதுல்யாரவி தான்.

அப்படிப்பட்ட அதுல்யா முதன் முதலில் நடிக்க ஒப்பந்தம் செய்த திரைப்படம் என்றால் அது "நாகேஷ் திரையரங்கம்" தான். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இப்படம் வெளியிடுவதற்கு தாமதம் ஆனதால் இவரது நடிப்பு வெளியுலகத்திற்கு தெரியாமல் போனது. இதனை தொடர்ந்து மனம் தளராத அதுல்யா, இயக்குனர் சிவராஜ் இயக்கத்தில், புதுமுக நடிகர் ஜிகே உடன் இணைந்து நடித்த "காதல் கண் கட்டுதே" என்ற திரைப்படம் மூலம் 2017ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். ஆனால் திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வியடித்தாலும் பத்திரிகைகளில் இப்படம் நல்ல கருத்துக்களை பெற்றது.
இதையும் படிங்க: கூலி படத்தில் இணையும் புதிய நடிகை...! லோகேஷ் கொடுத்த புதிய ட்ரீட்..!

பின், 2018ம் ஆண்டு இயக்குநர் துரை இயக்கத்தில், சமுத்திரக்கனி, சாம் ஜோன்ஸ், ரோசிணி பிரகாஷ், பாலா சரவணன் ஆகியோருடன் அதுல்யா ரவி நடித்து வெளியான திரைப்படம் "ஏமாலி". இப்படத்தில் "ரித்து" என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதுல்யா, இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து தலைமுடியின் நிறத்தில் மாற்றம் செய்து இருந்தார். பின் இவரது நடிப்பில் வெளிவராமல் தாமதமான "நாகேஷ் திரையரங்கம்" வெளியானது.

இதனை தொடர்ந்து, 2019ஆம் ஆண்டு வெளியான "சுட்டு பிடிக்க உத்தரவு" என்ற அதிரடித் திரைப்படத்தில் நடிகர் விக்ராத்திற்கு ஜோடியாக புவனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அவரது நடிப்பை பார்த்து பிடித்து போன இயக்குநர் சமுத்திரக்கனி அவரது "நாடோடிகள் 2" திரைப்படத்தில் சசிகுமார், அஞ்சலி, பரணி போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அதுல்யாவையும் நடிக்க வைத்தார். மீண்டும் சமுத்திரக்கனியின் "அடுத்த சட்டை" என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து, "வட்டம்" என்ற திரைப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா மற்றும் மஞ்சிமா மோகன் போன்றோருடன் நடித்து, பின் சாபிமாரி, காடவர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து மீண்டும் படப்பிடிப்பில் பிசியாக இருக்கிறார்.இப்படி பல படங்களில் நடித்து இன்று தனக்கென ரசிகர்களை வைத்திருக்கும் அதுல்யா ரவி, தனது இன்ஸ்ட்டா பதிவில் தனது ரசிகர்களுக்காக எப்பொழுது அவரது புகைப்படத்தை பதிவிடுவார். அந்த வகையில் இன்று அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை மிரளவைத்துள்ளது.
இதையும் படிங்க: 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற லோகேஷ் கனகராஜ் 'பர்த்டே பார்ட்டி'...! வாழ்த்து கூறி வரும் பிரபலங்கள்..!