கடந்த 16ம் தேதி அதிபர் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க்கின் திறன் மேம்பாட்டுத்துறை வெளியிட்ட உத்தரவில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுவந்த வாக்காளர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் நிதியுதவி 2.10 கோடி டாலர் நிதியுதவியை ரத்து செய்து அறிவித்தது. இது குறித்துப் பேசிய அதிபர் ட்ரம்ப் “ இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது, சுங்கவரி அதிகம் விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆதலால் அமெரிக்க அரசு வழங்கிவந்த 2.10 கோடி டாலர்கள் நிதியுதவியை உடனடியாக ரத்து செய்கிறோம். இனிமேல் இந்த நிதியுதவி இந்தியாவுக்கு வழங்கப்படாது. எனக்கு இந்தியா மீதும் அந்நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மீதும் மிகுந்த மரியாதை இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் மியாமி நகரில் எப்ஐஐ சார்பில் நடந்த மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் புதன்கிழை பங்கேற்றார். அதற்கு முன்பாக அதிபர் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில் “ அமெரிக்காவில் இதற்கு முன் இருந்த ஜோ பிடன் அரசு, இந்தியாவில் யாரையோ சிலரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வாக்காளர்கள் ஊக்குப்பு திட்டம் என்ற பெயரில் 2.10 கோடி டாலரை செலவிட்டுள்ளது. இந்தியாவில் வாக்காளர்கள் சிறப்பாக வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை ஏன் செலவிட வேண்டும். நாங்கள் ஏற்கெனவே இது குறித்து இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
இதையும் படிங்க: 2 ட்ரில்லியன் டாலர் பற்றாக்குறை... அமெரிக்கா திவாலாகிவிடும் என எச்சரிக்கும் எலான் மஸ்க்...

ரஷ்யாவும் தேர்தல் நேரத்தில் 2 ஆயிரம் டாலர் அளவுக்கு இணையதள விளம்பரங்களை வெளியிட்டதாகவும் நாங்கள் கேள்விப்பட்டோம். உக்ரைன் ரஷ்ய போரில் உக்ரைன் நலனுக்காக அமெரிக்க அரசு தன்னுடைய மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கொடுத்தது, ஆனால், யாரும் போரில் வெற்றி பெறவில்லை. ஐரோப்பாவில் பணத்துக்கு உத்தரவாதம் என்ற அடிப்படையில் அமெரிக்கா 20 கோடி டாலர்களை செலவிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா எந்த பலனையும் பயனையும் அடையவில்லை.

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அரசில் மோசமான நிர்வாகம் இருக்கிற, ஜனநாயக நடவடிக்கைகள் நம்பகத்தன்மையற்று இருந்தது. ஜெலன்ஸ்கி அரசுக்கு அமெரிக்கா அரசு சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட பாதிக்கு மேற்பட்ட நிதியைக் காணவில்லை. உக்ரைனில் பொதுத் தேர்தல் நடத்தவும் உக்ரைன் அதிபர் மறுத்துவிட்டார். மக்களுக்கு நல்லாட்சி வழங்குவேன் என்று மட்டும் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஒரு சர்வாதிகாரி தேர்தல் இல்லாமல் இருக்கிறார்
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஜோ பிடன் ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்கள் ஒட்டுமொத்தமாக நீக்கம்: அதிபர் ட்ரம்ப் அதிரடி