கோவையில் நடைபெற்ற மத்திய அரசின் வனத்துறை டெக்னீசியன், டெக்னிக்கல் உதவியாளர் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 8 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் உள்ள இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழுவின் இயக்குநர் குன்ஹி கண்ணன் என்பவர் கோவை சாயிபாபாகாலனி போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். அதில், ‘‘கோவை வனத்துறை அலுவலக வளாகத்தில் வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் குழு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் சார்பில், கடந்த மாதம் 8-ம் தேதி, 9-ம் தேதி ஆகிய இருநாட்கள் மல்டி டாஸ்கிங் ஸ்டாப்ஸ் (எம்.டி.எஸ்), தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்துக்கு தேர்வு நடத்தியது.

அதனைத் தொடர்ந்து விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டன. அதில் தகுதியின் அடிப்படையில் தேர்வு எழுதியவர்கள் பட்டியலிடப்பட்டனர். பட்டியலிடப்பட்ட தேர்வாளர்களிலன் ஆவண சரிபார்ப்புக்காக நேற்று ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதில் எம்.டி.எஸ் பதவிக்கான ஆவண சரிபார்ப்பின் போது, அங்கு வந்த 8 தேர்ச்சி பெற்றவர்களின் கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர்கள் மீது அப்போது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து தேர்வு நடந்தபோது வந்திருந்த அவர்ர்களிடம் பெறப்பட்ட கைரேகைகள் ஆய்வு செய்யப்பட்டன.
இதையும் படிங்க: மனைவியின் இதயத்தை துளைத்த 29 குண்டுகள்.. இதயம் என்ற பகுதியே இல்லாமல் போன சோகம்.. கோவை ஆசிரியை கொலையில் நடந்தது என்ன..?
அதில், 8 பேர், எழுத்துத் தேர்வின் போது கலந்து கொள்ளவில்லை என்பதும், ஆள் மாறாட்டம் மூலம் வேறு நபர்கள் இவர்களுக்கான தேர்வுகளை எழுதியதும் தெரியவந்தது. இதில் தொடர்புடைய உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரிஷிகுமார் (26), நரேந்திரகுமார் (24), பிபன்குமார் (26), பிரசாந்த்குமார் (26), லோகேஷ் மீனா (24), அசோக்குமார் மீனா (26), அரியானாவைச் சேர்ந்த ஷிபம் (26), பிஹாரைச் சேர்ந்த ராஜன்குமார் (21) ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டு இருந்தது. அந்த புகாரின் பேரில் சாய் பாபா காலனி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இநதனைத் தொடர்ந்து அந்த 8 பேரையும் நேற்று இரவே போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு மரங்கள், செடிகள் குறித்தும், மர இனங்களை பெருக்குவது குறித்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகிறது. மேலும் தட்ப வெப்ப சூழலுக்கு ஏற்ப வளரும் செடிகள் மற்றும் மரங்களை பூச்சிகள் தாக்குதலில் இருந்து காப்பாற்றுவது, பூச்சிகளை கண்டறிந்து ஆய்வு செய்வது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மரங்களின் தன்மையை கண்டறியும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த அலுவலகத்தில் காலியாக உள்ள பல்திறன் பணியாளர்களுக்கான தேர்வு கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி நான்காம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேர்வில் பங்கேற்றவர்களுக்கான சான்றிதழ்கள் சரி பார்ப்பு பணிகள் நேற்று நடைபெற்றது. இதில் தேர்வு எழுதியவர்களில் 50 க்கும் மேற்பட்டோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் சான்றிதழ்கள் சரி பார்த்த போது பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் 4 பேர் ஆள் மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் ஹரியானா மாநிலத்தை சார்ந்த அமித்குமார் (30), அமித்குமார் (26), அமித் (23), சுலைமான் (25) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குநர் குன்கிகண்ணன் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 4 பேரையும் கைது செய்தனர். வட மாநில இளைஞர்கள் தொடர்ந்து ஆள்மாறாட்டத்தில் ஈடுபடுவது தொடர்கதையாகி வருகிறது.
இதையும் படிங்க: முதல்வரின் தேர்தல் வாக்குறுதி! கோவை கிரிக்கெட் மைதானத்திற்கு கிடைத்த தடையில்லாச் சான்று!!!