பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 8 மாத குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தியா டுடே செய்தித்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த குழந்தையின் ரத்த மாதிரிகள் கடந்த 2 ம்தேதி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தி தளம் தெரிவித்துள்ளது.
எச்எம்பிவி வைரஸ் என்பது ஹியூமன் மெடாப்நியூமோவைரஸ் என்பதாகும்.
பெங்களூரு நகர சுகாதார நிர்வமாகமான பிபிஎம்பி அதிகாரிகள் கூறுகையில் “ இந்த குழந்தையின் அடையாளம், குடும்பத்தினர் குறித்து எந்த விவரங்களையும் இப்போது வெளியிட முடியாது. இவர்கள் சமீபத்தில் எந்த நாட்டுக்கும் செல்லவும் இல்லை, எந்த அறிகுறியும் தெரியவில்லை” எனத் தெரிவித்துள்ளது.

ஆனால், இந்த பரிசோதனை முடிவுகளை பெங்களூரு நகர சுகாதாரத்துறை தனிப்பட்ட ரீதியில் பரிசோதிக்கவில்லை, தனியார் மருத்துவமனையின் பரிசோதனைக் கூடங்கள் அளித்த தகவல்கள் அடிப்படையில் தெரிவித்துள்ளன. ஆனால் , பரிசோதனை முடிவுகள் மீது முழுமையாக நம்பிக்கை இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக இந்தியா டுடே தெரிவித்துள்ளது.
இந்த எச்எம்பிவி வைரஸ் பெரும்பாலும் குழந்தைகளையே பாதிக்கக்கூடியது. உலகளவில் இந்த வைரஸ் பாதிப்பு 0.7 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இந்த வைரஸ் குறித்த எந்தவிதமான பதிலும் தெரிவிக்கவும் கர்நாடக சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள்.
சீனாவில் பரவி வரும் இந்த எச்எம்பிவி வைரஸ் குறித்து எந்தவிதமான அச்சமும் இந்தியாவில் உள்ள மக்களுக்குத் தேவையில்லை, பதற்றமடைய வேண்டாம் என்று மத்திய சுதாகாரத்துறை இயக்குநரம் தெரிவித்துள்ளது.

எச்எம்பிவி வைரஸ் என்றால் என்ன .. ?
எச்எம்பிவி வைரஸ் என்பது ஹியூமன் மெடாப்நியூமோவைரஸ் என்பதாகும்.சமீபத்தில் சீனாவில் உள்ள மருத்துவமனைகளில் மக்கள் அலை மோதுவதாகவும், சிகிச்சைக்காக வரிசையில் நிற்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியானது. இந்த மக்கள் அனைவரும் எச்எம்பிவி எனும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அந்த வீடியோக்கள் தெரிவித்தன. எச்எம்பிவி வைரஸ், இன்ஃப்ளூயன்சா ஏ, மைக்கோபிளாஸ்மா நிமோனியா, கோவிட்-19 ஆகிய வைரஸ்கள் பரவலும் இருப்பதாகவும் அந்த வீடியோக்களில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: கடலுக்கடியில் 15 லட்சம் கி.மீ நீள கேபிள்களை வெட்டிய சீனா... சர்வ(ர்) நாசம்... ஹைபிரிட் போர் பதற்றத்தில் இந்தியா- அமெரிக்கா..!

எச்எம்பிவி வைரஸ் முதன் முதலில் கடந்த 2001ம் ஆண்டு நெதர்லாந்தில் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் மனிதர்களின் சுவாச உறுப்பு, நுரையீரலில்தொற்றை ஏற்படுத்தி, பாதிப்பை உண்டாக்கும் என அமெரிக்க நுரையீரல் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தால், அவர்களின் எச்சில் பட்டாலோ அதாவது தும்முதல், இருமும் போதும், பாதிக்கப்பட்டவர்கள் தொட்ட பகுதிகளை தொடும்போது இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும். இந்த வைரஸ் குறிப்பாக குளிர்காலம், கோடை காலத்தில் அதிகமாகப் பரவும் தன்மை கொண்டது.
அறிகுறிகள் என்ன...?
இந்த எச்எம்பிவி வைரஸின் அறிகுறிகள் பாதிக்கப்பட்டவருக்கு தொடர் இருமல், காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல், தொண்டை கட்டுதல் போன்றவை இருக்கும். சிலருக்கு மூச்சுவிடச் சிரமும், மூச்சுவாங்குதலும் இருக்கும், சிலருக்கு தோலில் அரிப்பு, தடிப்புகளும் இருக்கும்.
இதையும் படிங்க: சீனாவில், கொரோனாவை போல் அச்சுறுத்தும் புதிய வைரஸ்: "பீதி வேண்டாம்" என்கிறது, இந்தியா