மஹேஷ்வரில் வசிக்கும் மோனலிசா, மஹாகும்பமேளா கண்காட்சியில் மாலைகள் விற்க வந்திருந்தார். அவர் கேமராவில் பதிவான பிறகு சமூக ஊடகங்களில் வைரலானார். இது அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. அதே நேரத்தில் இந்தப் புகழால் அவர் சில பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
லோக்மாதா அஹில்யாதேவி, கோட்டை, கோயில்கள், புடவைகள் மற்றும் நர்மதா நதி ஆகியவற்றிற்கு பெயர் பெற்ற மகேஷ்வர் இப்போது மோனலிசாவாலும் பிரபலமாகி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் நர்மதா நதிக்கரையில் அமைந்துள்ள ஒரு கலாச்சார, மத நகரமான மகேஷ்வரின் வார்டு எண் 9ல் வசிப்பவர் மோனாலிசா என்ற மோனி. அவர் பார்தி சமூகத்தைச் சேர்ந்தவர்.

இந்த சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தாங்கள் முதலில் ராஜஸ்தானி ராஜ்புத் சாதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், அவர்களின் மொழி அந்த இடத்தின் மொழியுடன் கலக்கிறது. முன்பு அவர்கள் வேட்டையாடுதல், கொரில்லா போரில் வல்லவர்களாக இருந்துள்ளனர். அவர்களின் குடும்ப தெய்வங்கள் மௌலி மாதா, காளிகா மாதா, சப்தஷ்ருங்கி மாதா, வடேகான் மாதா, கோடியர் மாதா. சில பகுதிகளில் இது குற்றங்களுடன் தொடர்புடையது. ஆனால் இப்போது அது முக்கிய நீரோட்டத்திற்கு வருகிறது.
இதையும் படிங்க: கும்பமேளா குளியலில் தொற்று நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு… விஞ்ஞானிகள் சொன்ன 'விநோத' தகவல்..!

விஸ்வ இந்து பரிஷத்தின் தினேஷ் சந்திர கட்டோட் கூறுகையில், ''முன்பு இந்த சமூகத்தினர் முகாம்களில் வசித்து வந்தனர். ஆனால் சுமார் மூப்பதாண்டுகளுக்கு முன்பு, நகர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி ரமேஷ் கும்ராவத், அவர்களுக்கு தப்லா சாலை, ஜெயில் சாலைகளில் நிலத்தை வழங்கி வழங்கினார். அதன் பிறகு அவர்கள் நிரந்தர வீடுகளைக் கட்டினார்கள். இந்த மக்கள் நாடு முழுவதும் காந்தி மாலையை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் சமூகத்து பெண்கள் எந்தக் கவலையுல் இல்லாமல், வெள்ளந்தியாக இருப்பார்கள்.
இந்த சமூகத்தின் பெண்கள், ஒவ்வொரும் எல்லா ஆண்களை 'மாமா' என்றும் பெண்கள் எல்லோரையும் 'அம்மா' என்றும் அழைப்பார்கள். கார்கோன் மாவட்டத்தின் சோட்டி கார்கோன் மற்றும் மகேஷ்வரில் சுமார் 700 பார்தி மக்கள் இருக்கிறார்கள்.அவர்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 450 பேர் மகேஷ்வரில் மட்டும் வசிக்கின்றனர்'' என்று அவர் கூறினார். அவர்கள் பல்வேறு மத நிகழ்வுகள், கண்காட்சிகளில் மாலைகள், ருத்ராட்சம் போன்றவற்றை விற்கிறார்கள். இந்து மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அவர்களது சமூகத்திற்குள் திருமண உறவுகளைக் கொண்டுள்ளனர்.
இந்த பழங்குடியின ஆண்கள் பொதுவாக சட்டை பேன்ட் அணிவார்கள். பெண்கள் சட்டை/டி-சர்ட் மற்றும் காக்ரா அணிவார்கள். சைவம், அசைவம் இரண்டையும் விரும்புகிறார்கள். பெரும்பாலும் இசை அமைப்புகளை வாடகைக்கு எடுத்து வேடிக்கைக்காக நடனமாடுகிறார்கள்.
பொதுவாக இவர்கள் அதிகம் படித்தவர்கள் அல்ல.குழந்தைகள் சிறுவயதிலிருந்தே பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், அவர்களின் பொது அறிவு அபாரமானது. நாடு முழுவதும் பயணிக்க பேருந்துகள், ரயில்கள், வழித்தடங்கள் மற்றும் புவியியல் நிலைமைகள் பற்றி அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

இன்று மோனலிசாவின் குடும்பத்திற்கும் மூன்று செண்ட் நிலம் இருக்கிறது. மோனலிசாவின் மாமா விஜய் படேலும் படேல் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சமூகம் இந்து மதம் தொடர்பான அனைத்து பண்டிகைகளையும் கொண்டாடினாலும், நாட்டில் எங்கும் வசிக்கலாம், ஆனால், ஹோலி பண்டிகைக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு மகேஷ்வருக்குத் திரும்புவார்கள். ஹோலி பண்டிகையின் போது அவர்கள் குடும்ப தெய்வத்திற்கு பலியிடுகிறார்கள்.
நீதித்துறை அமைப்பை விட பஞ்சாயத்து மீது தான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். ஏதேனும் தகராறு, மோதல் ஏற்பட்டால், இந்த சமூகம் தனது பிரச்சினையை படேலிடம் கூறி அதற்கேற்ப தகராறை தீர்த்து வைக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பார்திகள் 'குற்றவியல் பழங்குடியினர்' என்று அறிவிக்கப்பட்டனர். 1871 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட 'குற்றவியல் பழங்குடியினர் சட்டம்' சுமார் 500 பழங்குடியினரை அதன் எல்லைக்குள் கொண்டு வந்தது. 1952 ஆம் ஆண்டு பண்டித ஜவஹர்லால் நேருவின் முயற்சியால் இந்தப் பழங்குடியினர் 'விடுவிக்கப்பட்ட' போதிலும், சமூகத்தில் அவர்கள் மீதான அணுகுமுறை மாறவில்லை. இன்றும் அவர்கள் 'விமுக்த ஜஞ்சாதி' என்று அழைக்கப்படுகிறார்கள். இது அவர்களின் கடந்த காலத்தை நமக்கு நினைவூட்டுகிறது. இந்தக் களங்கத்தின் காரணமாக, அவர்கள் இப்போதும் சமூகத்தாலும், அரசாங்கத்தாலும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இதையும் படிங்க: மகா கும்பமேளாவில் 'மிக அழகான சாத்வி...' மனம் மயக்கும் இந்த ஹர்ஷா யார்..?