கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்தது. 2022 ஆம் ஆண்டு தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் நடைபெற்று வருகிறது. இதனிடையே அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றார். இதை அடுத்து உக்ரைன் – ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த ஆலோனைக் கூட்டத்தில் உக்ரைன் சார்பில் எந்த அதிகாரிகளும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது. போர் காரணமாக உக்ரைனில் 20% பகுதியில் செல்போன் டவர்கள் அடித்து நொருக்கப்பட்டிருக்கின்றன. இந்த பகுதியில் சிக்னல் கிடைக்காது. எனவே ஸ்டார்லிங்க் மூலம்தான் இணைய வசதி கொடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: எலான் மஸ்குக்கு என்ன ஆச்சு..? இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்..!!
இந்த சேவையை பயன்படுத்தி தான் உக்ரைன் ராணுவம் ரஷ்யாவுடன் போரை தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகைக்கு அழைத்திருந்த டிரம்ப், ரஷ்யாவுடனான போரை நிறுத்த சொன்னதாக கூறப்படுகிறது. இதுஒருபுறம் இருக்க மறுபுறம் உக்ரைனுக்கு எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் உதவிகரமாக இருந்து வருகிறது.

போரை நிறுத்த டிரம்ப் அறிவுறுத்தியிருந்ததை அடுத்து ஸ்டார்லிங்க் சேவை உக்ரைனிலிருந்து திரும்ப பெறப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சேவையை தொடர மஸ்க் அனுமதி வழங்கியுள்ளார். இதனால் எலான் மஸ்க்தான் அமெரிக்காவின் அதிபர் என்றும், இவர் பேச்சை கேட்டு ஆடும் பொம்மைதான் டிரம்ப் என்றும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. மேலும் எலான் மஸ்க்கின் இந்த செயல் சலசலப்பை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க: அம்மாடியோவ்! 14 வது குழந்தைக்கு அப்பாவான பிரபலம்!!