பிரிட்டிஷிடம் இருந்து மொரீஷியஸ் 1968 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி சுதந்திரம் பெற்றது. அந்த நாளே ஆண்டு தோறும் மொரீஷியஸ் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மொரீசியஸ் நாட்டின் 57வது தேசிய தின கொண்டாட்டம் நடைபெற உள்ளது.

அதில் பங்கேற்க பிரதமர் மோடி 2 நாள் பயணமாக புறப்பட்டுச் சென்றுள்ளார். இது குறித்து அவர் தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், மொரீசியஸ் நாட்டுக்கு 2 நாள் பயணமாக செல்வதாகவும், 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வரலாற்றில் முதன்முறை.. பிரதமரின் 'லக்பதி தீதி' விழா... பாதுகாப்பு பணியில் பெண் போலீஸ் மட்டுமே..!

எனது நண்பரும், பிரதமருமான டாக்டர் நவின்சந்திர ராம்கூலமை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அங்கு வசிக்கும் இந்திய மக்களுடன் உரையாட மிகவும் ஆவலாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மொரீசியஸ் நாடு நம்முடன் கடல்சார் துறையில் நெருங்கிய கூட்டாளி என்றும் நாம் ஆழமான கலாசார உறவுகளால் இணைக்கப்பட்டுள்ளோம் எனவும் தனது வருகை இந்தியா-மொரீசியஸ் நாடுகள் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்றும் பதிவிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு மொரீஷியஸ் தேசிய தின விழாவில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்துக்கொண்ட நிலையில், இந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளார்.பிரதமர் மோடி கலந்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலம், அவர் மொரீஷியஸ் வர உள்ளது பெரு மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என்னது சம்மதிச்சிட்டிங்களா..! அமெரிக்க வரிக்குறைப்பு குறித்து பிரதமர் மோடி விளக்க வேண்டும்.. காங்கிரஸ் வலியுறுத்தல்..!