அடிக்கடி இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கி வந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சமீபத்தில் பதவி விலகினார். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி 'எக்ஸ்' சமூக வலைத்தளத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டியிருக்கிறது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
" உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை டேவிட் கேமரூன், போரிஸ் ஜான்சன், லிஸ்ட்ரஸ், ரிஷி சுனக் என ஐந்து பிரதமர்களை பார்த்து விட்டது. தற்போது கெய்ர் ஸ்டார்மர் என்பவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

அதேபோல் இந்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில், டோனி அபாட் , மால்கம் டர்ன்புல், ஸ்காட் மாரிசன் என மூன்று பிரதமர்கள் மாறி இருக்கிறார்கள். தற்போதைய பிரதமர் ஆண்டனி அல்பனிஸ்.
இதையும் படிங்க: “கனடாவை அமெரிக்காவுடன் இணைச்சிருங்க”: ஜஸ்டின் பதவி விலகியவுடன் சேட்டையைத் தொடங்கிய டிரம்ப்..
அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், கடந்த 10 ஆண்டுகளில் ஒபாமா, டிரம்ப், ஜோபைடன் என மூன்று பிரதமர்கள் பதவியில் இருந்திருக்கிறார்கள். ஜப்பானில் ஷின்ஷோ அபே, யாஷிகிடே சுகா, புமியோ கிஷ்கிதா ஆகிய மூன்று பிரதமர்கள் மாறி இருக்கிறார்கள். தற்போது அந்த பொறுப்பை வகித்து வருபவர் ஷிகெரு இஷூபா.
இது தவிர கனடாவும் ஸ்டீபன் ஹார்பர், ஜஸ்டின் ட்ரூடோ என இரண்டு பிரதமர்கள் மாற்றத்தை கண்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் உலக அளவில் பொருளாதார பலம் வாய்ந்த முக்கிய நாடுகளின் பிரதமர்கள் பல முறை மாறி இருக்கிறார்கள். இருந்த போதிலும் இந்தியாவில் இன்னும் நிலையான மற்றும் வலுவான பிரதமராக நரேந்திர மோடி நீடித்து வருகிறார்" என அதில் பெருமிதத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் "அல்டிமேட் பிக்பாஸ் எனர்ஜி" என்றும் நரேந்திர மோடிக்கு பாஜக புகழாரம் சூட்டி இருக்கிறது.
இதையும் படிங்க: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ திடீர் ராஜினாமா...