நம் தலை முடி வளர்ச்சிக்கு நல்ல இரத்த ஓட்டம் தேவை, அதனுடன் முடி வலுவாக வளர சிறந்த ஊட்டச்சத்துக்கள் தேவை. இவை அனைத்தும் நாம் உண்ணும் உணவில் இருந்து பெற முடியும். மிகவும் எளிமையாக கிடைக்கும் காய் கறிகள், பழங்கள், சில நட்ஸ் வகைகளே அதற்கு போதுமானது. வெறும் சோறு, தோசை, இட்லி இவற்றை குறைத்துக் கொண்டு மற்ற ஆரோக்கியம் தரும் உணவுகளை எடுத்து வந்தால் உடலுக்கும் நன்மை பயக்கும். உறுதியான முடி வளர்ச்சிக்கு புரதம், கால்சியம், இரும்பு சத்து, கொழுப்பு சத்துக்கள் மிகவும் அவசியம். எந்தெந்த உணவுகளில் முடி வளர்ச்சியை தூண்டும் உணவுகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

வைட்டமின் ஏ, வைட்டமின் b5, வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்த உணவுகள்;
வைட்டமின் ஏ சத்துக்கள் நம் முடியின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்காற்றுகிறது. அது பப்பாளி, கேரட், அத்திப்பழம், காய்ந்த திராட்சை, பேரிச்சம்பழம், உள்ளிட்டவைகளில் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ சத்து எளிதில் தண்ணீரில் கரையும் தன்மை கொண்டதால் உடல் தக்கவைத்து கொள்ள தினமும் நாம் சாப்பிட வேண்டும். மேற்கூறிய ஏதாவது ஒரு பழ வகையை ஒரு பவுல் அளவுக்கு நாம் சாப்பிட்டு வந்தாலே போதும்.
இதையும் படிங்க: தலைமுடி கொட்டாமல் அடர்த்தியாக வளர ஆசையா ? இத பண்ணலாமே...

விட்டமின் b5 சத்துக்கள் முடியின் வளர்ச்சிக்கும் உறுதி தன்மைக்கும் மிகவும் துணை புரிகிறது. இது சக்கரை வள்ளி கிழங்கு, முட்டை, மஷ்ரூம், காலிபிளவர் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் b5 சத்து தண்ணீரில் எளிதில் கரையும் தண்மை கொண்டது எனவே தினமும் அதனை சாப்பிட்டு வந்தால் தான் நமக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.
வைட்டமின் சி சத்து நம் தோலில் கொலாஜன் உற்பத்திக்கு மிகவும் காரணமாகவும், சிறந்த ஆன்டி ஆக்ஸிடேடிவ் குணங்கள் கொண்டவையாகவும் உள்ளன. எனவே இது இரத்த உற்பத்திக்கு மிகவும் பங்காற்றுகிறது. தினமும் வைட்டமின் சி சத்துள்ள நெல்லிக்காய், எலுமிச்சை, சாத்துக்குடி, கொய்யா, ஆரஞ்சு, முலாம்பழம், ஸ்டராபெர்ரி உள்ளிட்ட உணவுகள் சாப்பிட்டு வந்தால் முடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல ஆரோக்கியமாக வளர வைக்கும். தண்ணீரில் எளிதில் கரையும் தன்மை கொண்டதால் இந்த சத்துக்கள் தினம் தோறும் உடலில் சென்று சேர வேண்டும்.
வைட்டமின் ஈ சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இது அவகடோ, பாதாம், சூரிய காந்தி விதைகள், அப்ரிகாட் ஆகியவற்றில் நிறைந்துள்ளது. இதனை வாரம் மூன்று முறை ஒரு மில்க் ஷேக் போன்று செய்து சாப்பிட்டு வரலாம்.

இரும்பு சத்துக்கள் நிறைந்த உணவுகள் தான் பெரிய அளவில் பெண்களுக்கு தேவையான ஒன்றாக உள்ளது. மாதவிடாய் காலங்களில் அதிக இரத்த போக்கு ஏற்பட்டால் அது இரும்பு சத்து குறைபாட்டை உருவாக்கி முடி உதிர்வை ஏற்படுத்திவிடும். எனவே, இரும்பு சத்துள்ள உணவுகள் சாப்பிட்டு வருவது முடி வளர்ச்சிக்கும் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். பச்சை காய்கறிகள், கீரைகள், ப்ரோக்கோலி, பச்சை பட்டாணி உள்ளிட்டவைகளில் அவை நிறைந்துள்ளன. வாரம் மூன்று முறை இரும்பு சத்துள்ள உணவுகளை நாம் சாப்பிட்டு வந்தாலே போதுமானது.

புரதம் நம் முடிக்கு நல்ல வலுவை கொடுப்பதால் அதன் வேர்ப்பகுதி இறுக்கமாக இருக்க உதவுகிறது. இவை முட்டை, சிக்கன், இறைச்சிகள், மீன் மற்றும் கடல் சார் உணவுகள் ஆகியவற்றிலும், பன்னீர், சீஸ் உள்ளிட்டவைகளில் இது நிறைந்துள்ளது. தினமும் நம் உடலின் வலுவுக்கும் முடியின் வலுவுக்கும் புரதம் நிச்சயம் தேவையான ஒன்று. ஆகையால் அதனை தினமும் நாம் உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட்ஸ் நிறைந்த உணவுகள் முடியின் வளர்ச்சியை தூண்டி மிகவும் ஆரோக்கியமாக வளர வைக்கும். இது, கடல் மீன்கள், நண்டு வகைகள், வால் நட்ஸ், ஆளி விதை, பாதம் உள்ளிட்டவற்றில் நிறைந்துள்ளது. இவ்வாறு நாம் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வை தடுத்து, முடியின் வளர்ச்சியை தூண்டி ஆரோக்கியமாக வளர வழி வகை செய்யலாம்.
இதையும் படிங்க: கெமிக்கல் ஹேர் டை போட்டு அலர்ஜி ஆகுதா ? அப்போ இயற்கை வழிக்கு மாறுங்க