அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். விசா கட்டுப்பாடு, குடியுரிமை, வரி உள்ளிட்டவை மற்ற நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அதிபர் டிரம்ப்பின் அதிரடி நடவடிக்கைகளால் அண்டை நாடுகள் அதிருப்தியில் உள்ளன. குறிப்பாக இந்தியா கடும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் இந்தியர்கள் அங்கே வேலைகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதுவரை விசாவை புதுபிக்க 540 நாட்கள் அவகாசம் இருந்த நிலையில் எச்.1 பி விசா உள்ளிட்ட விசாவின் ரினீவல் காலத்தை குறைத்து டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, அங்கே வேலை அனுமதி வாங்கி விசா பெற்று பணியாற்றுபவர்களின் விசா காலாவதியாகிவிட்டால் 180 நாட்கள்க்குள் புதுபிக்க வேண்டும் என்று டிரம்ப் புதிய விதி கொண்டு வந்துள்ளார். இதனால் அங்கே விசா பெறுவது கடினம் ஆகி உள்ளது.

டிரம்பின் இந்த உத்தரவு தலைவலியாக உள்ள நிலையில் மேலும் ஒரு தலைவலியாக இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீது பதில் வரி விதிக்காமல் விட மாட்டேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும் வரி தொல்லையில் இருந்து அமெரிக்காவை விடுவிக்காமல் விடபோவதில்லை என்றும் அமெரிக்கா மீது கூடுதல் வரி விதிக்கும் நாடுகள் மீது தாங்களும் வரி விதிப்பதோடு அமெரிக்காவுக்கான வரியை குறைக்க ஏப்ரல் 2 வரைதான் கால அவகாசம் என்றும் அதற்குள் வரியை குறைக்காத நாடுகள் மீது நாங்கள் கண்டிப்பாக கடுமையான வரிகளை விதிப்போம் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: TRUTH SOCIAL MEDIA -வில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி..!
இதனிடையே அமெரிக்காவின் வர்த்தக போர் காரணமாக இந்தியாவின் ஏற்றுமதியில் மிகப்பெரிய சரிவு ஏற்படும் என்று மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் கணித்து உள்ளது. Reciprocal tariffs என்று அழைக்கப்படும் பரஸ்பர கட்டணங்கள் ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார். இதன் மூலம் இந்தியா நேரடியாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல வழிகளில் டிரம்பு தொடர்ந்து தொல்லை செய்து வரும் நிலையில் தற்போது டிரம்பின் வரி மற்றும் விசா குடியேற்றக் கொள்கைகள் ஐடி ஊழியர்களை பாதிக்கும் என மூடிஸ் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இவை நேரடியாக ஐடி துறையை பாதிக்கவில்லை என்றாலும் மறைமுகமாக பாதிக்கும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க குடியேற்ற விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்ட இந்திய ஊழியர்களை நம்பியிருக்கும் ஐடி நிறுவனங்கள் சவால்களை சந்திக்கும் என்றும் கடுமையான குடியேற்றக் கொள்கைகள் காரணமாக இந்தியர்கள் ஆன்சைட் போக முடியாத நிலை ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனையை சரிசெய்ய டிசிஎஸ், இன்ஃபோஸிஸ்போன்ற நிறுவனங்கள் இந்தியர்களை ஆன்சைட் அனுப்பாமல் அமெரிக்காவில் இருக்கும் ஊழியர்களை பணிக்கு எடுக்கும் திட்டத்தில் உள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 41 நாடுகளுக்கு பயணத் தடை; விதிக்கப்போகும் டொனால்ட் டிரம்ப் - எந்தெந்த நாடுகள்.?