ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அப்பாவி மக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்று குவித்தனர். நாட்டையே புரட்டிப் போட்ட இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தானை முற்றிலுமாக புறக்கணிக்கும் விதமாகவும், தக்க பதிலடி கொடுக்கும் விதமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே, பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டிக்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒற்றுமையைக் காட்டவும், இந்திய இஸ்லாமியர்கள் அனைவரும் இன்று(வெள்ளிக்கிழமை) தொழுகையில் ஈடுபடும்போது கையில் கருப்புப் பட்டை அணிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதலில் காயமடைந்த மருத்துவர்..! முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்..!

இதையும் படிங்க: காஷ்மீருக்கு யாரும் போக வேண்டாம்.. தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா!!