பாகிஸ்தானின், பலுசிஸ்தானில் கடத்தப்பட்ட ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்து சஸ்பென்ஸ் தொடர்கிறது. பலுசிஸ்தான் விடுதலைப்படையும், பாகிஸ்தான் அரசும் முரண்பட்ட தகவல்களை கூறி வருகின்றன. பலூச் விடுதலை போராளிகள் தரப்பில் பாகிஸ்ஸ்தான் ராணுவ வீரர்கள் 60 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 150 பேர் இன்னும் தங்கள் காவலில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தரார், ராணுவமும், விமானப்படையும் இந்த நடவடிக்கையை முடித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் இராணுவம் இதுகுறித்து, ''கடத்தலின்போது 21 பயணிகளும் 4 வீரர்களும் கொல்லப்பட்டனர். 33 பலூச் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், ஒரு நேரில் பார்த்தவர் 70-80 இறந்த உடல்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார். பலூச் போராளிகளின் தகவல்களுக்கும், பாகிஸ்தான் அரசில் தகவல்களுக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அரசும், அதன் ராணுவமும் பொய் சொல்கின்றனவா? என்ற கேள்வி எழுகிறது.
இதையும் படிங்க: #BREAKING: தீவிரவாதிகளை வேட்டையாடியது பாகிஸ்தான்..! அனைத்து பயணிகளும் மீட்பு
பலூச் விடுதலை படையினரின் தகவல்படி, ரயிலில் மொத்தம் 426 பயணிகள் இருந்தனர். அதில் 214 பாகிஸ்தான் வீரர்கள் அடக்கம். ரயிலில் இருந்த 212 பொதுமக்கள் பின்தங்கியிருந்தனர். 60 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும் 150 வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இது தவிர, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலில் பலூச் படையின் 3 தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்'' எனத் தெரிவித்துள்ளது.

பலூச் போராளி படையினரின் காலக்கெடு இன்று மதியம் 1 மணியுடன் முடிவடைகிறது. பலூச் கைதிகளை விடுவிக்காவிட்டால், ரயிலில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் கொன்றுவிடுவதாக அவர்கள் மிரட்டியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், 150 பிணைக் கைதிகளையும் கொன்றுவிடுவோம் என்று பலூச் படையினர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 241 பலூச்களை விடுவிக்குமாறு அந்தப் போராளிப்படை கோரியுள்ளது.
பாகிஸ்தான் தங்களது ராணுவ வீரர்களைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் பலூச் போராளிப்படை கூறியுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் பேச்சுவார்த்தைக்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. நாங்கள் சொல்வதைச் செய்யும் திறன் எங்களுக்கு இருக்கிறது. காலக்கெடு முடியும் வரை ஒவ்வொரு மணி நேரமும் 5 பணயக்கைதிகளைக் கொல்வோம். நாங்கள் ஒரு முறை முடிவு செய்துவிட்டால், அது மாறாது. பாகிஸ்தானுக்கு தனது தவறை திருத்திக் கொள்ள கடைசி வாய்ப்பு உள்ளது. அவர்கள் போலி பிரச்சாரம், போலி கதைகளைப் பரப்புவதை நிறுத்த வேண்டும்.

60 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்று விட்டோம். 150 வீரர்கள் இன்னும் எங்களது காவலில் உள்ளனர். அவர்கள் 48 மணி நேர எங்கள் கெடுவுக்குப் பிறகு கொல்லப்படுவார்கள். சாதாரண பயணிகளுக்கு தீங்கு விளைவிக்காமல் விடுவித்துள்ளோம் '' எனக் கூறி உள்ளது.
பலூச் போராளிகள் வெளியிட்டுள்ள தகவல்படி, ரயிலில் மொத்த பயணிகள்- 426. பாகிஸ்தானின் வீரர்கள் 214 பேர். விடுவிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை - 212. கொல்லப்பட்ட பாகிஸ்தான் வீரர்களின் மொத்த எண்ணிக்கை- 60. இன்னும் பிணைக் கைதிகளாக உள்ள ராணுவத்தினர் - 150 பேர். காயமடைந்த பாகிஸ்தான் வீரர்கள் - 63 க்கும் மேற்பட்டவர்கள்.
அதே நேரத்தில், பாகிஸ்தான் அரசு தங்களது ராணுவ வீரர்கள் அனைத்து பலூச் போராளிகளையும் கொன்றுவிட்டதாகக் கூறுகிறது. எந்தவொரு ரயில் பயணிக்கும் காயம் ஏற்படாமல் இந்த நடவடிக்கை முடிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் போது அவர் 4 ராணுவ வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளனர். இது தவிர, 21 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டுள்ளனர்'' எனக்கூறுகிறது.

பாகிஸ்தான் அரசின் இந்தத் தகவல் உண்மை என்றால், ஏன் இந்த உண்மையை அதனால் நிரூபிக்க முடியவில்லை? ரயில் அவர்கள் வசம் இருந்தால் அதன் வீடியோக்கள் எங்கே? கொல்லப்பட்ட பலூச் போராளிகளின் உடல்கள் எங்கே?
பாகிஸ்தான் எந்த அடிப்படையில் 25 இறப்புகளைப் பற்றிப் பேசுகிறது? நேரில் பார்த்தவர்கள் 70-80 உடல்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர். அவமானத்தைத் தவிர்க்க பாகிஸ்தான் தனது இறப்பு எண்ணிக்கையை மறைக்கிறதா? குவெட்டா ரயில் நிலையத்திற்கு 200 சவப்பெட்டிகள் வந்து சேர்ந்ததாகக் கூறப்பட்டது என நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். ரயிலுக்கு வெளியே 70-80 உடல்கள் கிடந்தன. ரயிலுக்குள் பல சடலங்கள் இங்கும் அங்கும் கிடந்தன. பலூச் போர்படையினர் எங்களைப் பாதுகாப்பாக செல்ல அனுமதித்தது'' என பொதுமக்கள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: உயிரோடு விட்ருங்க.. காலில் விழுந்து கெஞ்சினோம்..! பாக். ஜாபர் எக்ஸ்பிரஸ் திகில் சாட்சி..!