கோடை வெயில் அதிகரித்து வருவதனால், பொதுமக்கள் வெயிலிலிருந்து தற்காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீர், இளநீர், தர்பூசணி உள்ளிட்ட நீர் சார்ந்த உணவுகளின் தேவை அதிகரித்துள்ள நிலையில், விற்பனையாகி வருகின்றன. இந்த தேவையை பெரும்பாலானோர் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தி லாபமீட்டி வருவதாக அதிகாரிகளிடம் புகார்கள் எழுந்தன.

அதாவது விற்பனை செய்யப்படும் தர்பூசணிகளில், குடிநீர் ரசாயனம் கலந்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் இதனை தடுக்கும் வகையில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தர்பூசணி கடைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: முன்கூட்டியே மாரடைப்பை கண்டுபிடிக்கும் செயலி.. அசத்திய ஆந்திர சிறுவன்..

வள்ளுவர் கோட்டம் பகுதியில் சாலையோரம் விற்பனை செய்யப்படும் தர்பூசணி கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தர்பூசணிகளை வெட்டி சோதனை செய்து பார்த்ததில் வழக்கத்தை விட அதிக அளவில் சிவப்பு நிறம் கொண்டிருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து இது குறித்து அதிகாரிகள் சோதனை செய்தது பலத்தில் ரசாயனம் கலந்தது தெரியவந்தது. இவ்வாறு உடலுக்கு ஆபத்தான ரசாயனங்களை உணவு பொருட்கள் மீது பயன்படுத்துவது உடலுக்கு பெரும் சீர்கேட்டை விளைவிக்க கூடும் என அதிகாரிகள் எச்சரித்தனர். சக்கரை பாகுடன் இந்த ரசாயனமானது கலக்கப்படுவதனால் எந்த வித்தியாசமும் தெரியாமல் இருக்கும் என்றும் இது போன்ற பழங்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: எகிறிய மின் கட்டணம்.. மூன்றாவது முறை ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பலு.. பெண்ணுக்கு இழப்பீடு வழங்க TANGEDCO-க்கு உத்தரவு...