இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து எஃப்பிஐ இயக்குனர் காஷ் படேல் ட்வீட் செய்த ட்வீட்டில் "பிடிபட்டது: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் வெளிநாட்டு பயங்கரவாதக் கும்பலின் ஒருவரான ஹார்ப்ரீத் சிங், இந்தியாவிலும், அமெரிக்காவிலும் உள்ள காவல் நிலையங்கள் மீது பல தாக்குதல்களைத் திட்டமிட்டதில் ஈடுபட்டதாக நாங்கள் நம்புகிறோம். எஃப்பிஐ சாக்ரமெண்டோ விசாரணையை நடத்தியது. உள்ளூர், இந்தியாவிலும் உள்ள எங்கள் கூட்டாளர்களுடன் ஒருங்கிணைத்தது. அனைவரிடமிருந்தும் சிறந்த பணி, நீதி நிலைநாட்டப்படும். வன்முறையைச் செய்பவர்களை எஃப்பிஐ தொடர்ந்து கண்டுபிடிக்கும் - அவர்கள் எங்கிருந்தாலும் விடமாட்டோம்'' எனத் தெரிவித்தார்
.
பயங்கரவாதி ஹர்ப்ரீத் சிங்குக்கும், பாகிஸ்தானின் இன்டர்-சர்வீசஸ் புலனாய்வுப் பிரிவுக்கும் தொடர்பு இருப்பதாக எஃப்பிஐ தொடர்புபடுத்துகிறது.
இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தார். கடந்த செப்டம்பர் 2024-ல் சண்டிகரில் ஓய்வு பெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஹேப்பி பாசியாவுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் தெரியவந்தது.இந்த பயங்கரவாத சதிச் செயலை தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் என்ற அமைப்பு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவுக்கு மாபெரும் வெற்றி: பஞ்சாபில் 14 தாக்குதல்கள்: பாக், ஐஎஸ்ஐயின் செல்லம்... தூக்கிய அமெரிக்கா..!
இதையடுத்து, ஹேப்பி பாசியாவை கைது செய்ய என்ஐஏ தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில், ஹேப்பி பாசியா பஞ்சாபில் நிகழ்ந்த 14 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையது மட்டுமல்லாமல், இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாபில் இவர் மீது 18க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை தூண்டும் மற்றும் உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு NIA ₹5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது. இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த கைது நடவடிக்கை இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: சட்டவிரோத பண பரிவர்த்தனை! ED வளையத்தில் நடிகர் மகேஷ்பாபு...