இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், கோவை மாநகராட்சி கழிவறைக்கு தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் தூய அரசியலின் நேர் வடிவம் கக்கன் மற்றும் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை ஆகியோரின் பெயரைச் சூட்டியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த 4 ஆண்டுகளாகப் புதிதாகத் திறக்கும் நூலகம், கலையரங்கம், பேருந்து நிலையம் என அனைத்து முதன்மை அரசு கட்டிடங்களுக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரைச் சூட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளது என்றும் அதைத்தவிர, தமிழ்ப்பெரும் தலைவர்களுக்கு தமிழ்நாட்டிலுள்ள ஒரு சில அடையாளங்களையும் அழித்தொழிக்கும் வகையில், பராமரிப்பு என்ற பெயரில் கட்டிடங்களில் ஏற்கனவே இருக்கும் தலைவர்களின் பெயரையும் மாற்றி வருகிறது எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவுக்கு சலிச்சது இல்ல திமுக..! மக்கள் பாவம் இல்லையா? வெடியை வீசிய சீமான்..!

இவையெல்லாம் போதாதென்று கோவை மாநகராட்சியில் கழிவறைக்கு கக்கன் மற்றும் அண்ணாதுரை பெயரைச் சூட்டி இழிவுபடுத்தியுள்ளதாகவும், பெருந்தலைவர்களை அவமதித்து, அவர்களின் பெரும்புகழை சிறுமைப்படுத்தும் கொடுஞ்செயல் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா? கழிவறைக்கு அண்ணாதுரை பெயரை வைத்த திமுக அரசு, புதிதாகத் திறக்கும் மதுக்கடைக்கு கருணாநிதி பெயரை திமுக அரசு சூட்டுமா என கேள்வி எழுப்பினார்.

ஆகவே, இதுபோன்ற இழிசெயல்கள் வேறெங்கும் நடைபெறாதவாறு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கி தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டுமென சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: சாட்டை துரைமுருகனின் யூடியூப் சேனல்... இதுதான் பிரச்சினை... உடைத்துப்பேசிய சீமான்..!