அதாவது, இசக்கியை பரிசோதனை செய்த டாக்டர்கள் தாய் அல்லது குழந்தை இரண்டில் ஒரு உயிரை தான் காப்பாற்ற முடியும் என அதிர்ச்சி கொடுக்கின்றனர். யாரை காப்பாற்ற வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல, எல்லாரும் அதிர்ச்சி அதிச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
மொத்த பேரும் ஹாஸ்பிடலில் கூடி விட பரணி உள்ளே சென்று, மீண்டும் இசக்கியை பரிசோதனை செய்கிறாள். இரண்டு பேரையும் காப்பாற்ற ஒரு வழி இருப்பதை கண்டுபிடிக்கிறாள். இதையடுத்து இசக்கியையும் குழந்தையையும் காப்பாற்ற சிகிச்சை கொடுக்கிறாள். இன்னொரு பக்கம் போலீசில் வேலையில் வந்த வீரா ரொம்ப நேரமாக வெளியே காத்துக் கொண்டிருக்கிறாள். 
அடுத்து ஸ்டேஷனுக்கு வந்த வைஜெயந்தி இந்த பொண்ணை எதுக்கு வெளியே காக்க வச்சிட்டு இருக்கீங்க என்று விசாரிக்க, இன்ஸ்பெக்டர் அந்த பொண்ணு வேலையில் சேர வந்திருப்பதாக சொல்கிறார்.
இதையும் படிங்க: பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !

வைஜெயந்தி எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. நல்ல பொண்ணு என்று வேலையில் சேர சொல்லி விட்டு வாழ்த்து சொல்ல வீரா, வைஜெயந்தி தனக்கு உதவியதாக தவறாக புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? வீராவை பழிவாங்க வைஜயந்தி போடும் புது திட்டம் என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதையும் படிங்க: ஒர்க் அவுட் ஆன சண்முகம் பிளான்.. அந்தர் பல்டி அடித்த வைஜெயந்தி! அண்ணா சீரியல் அப்டேட்!