திருச்சி சரக்கு டிஐஜி வருண் ஐபிஎஸ் இன் மனைவியும் திண்டுக்கல் சரக டிஐஜி ஆக செயல்பட்டு வரும் வந்திதா பாண்டே தற்போது மத்திய அரசு பணிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிய திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோர் அடுத்தடுத்த மாவட்டங்களில் பணி செய்வதாகவும், அவரது கணவர் வருண் ஐபிஎஸ் காவல் துறை வேலைகள் மட்டுமன்றி அரசியல்வாதிகள் சிலருடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாகவும்சில எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வந்தன.

குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது முக்கிய தலைவர்களிடம் தொடர்ந்து மோதல் போக்கை வருண் ஐபிஎஸ் கடைப்பிடித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒரு செய்தியாகும். இந்த நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் அதிர்ச்சி செய்து ஒன்றை வருண் ஐபிஎஸ் குடும்பத்திற்கு தெரிவித்திருக்கிறது. அதாவது வந்திதா பாண்டே தற்போது வகித்து வரும் திண்டுக்கல் சரக டிஐஜி பதவியில் இருந்து விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குற்றவாளிகளுக்கு காவல்துறை மீது பயமில்லாமல் போய்விட்டது.. திமுக மீது பாயும் பாஜக தலைவர் அண்ணாமலை...
2011 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியில் தேர்ச்சி பெற்ற வந்திதா பாண்டே, புதுக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றிய நிலையில் அண்மையில் சில மாதங்களுக்கு முன்பு அவர் திண்டுக்கல் சரக டி ஐ ஜி யாக நியமிக்கப்பட்டு இருந்தார். கணவன் மற்றும் மனைவி அடுத்தடுத்த மாவட்டங்களில் பணிபுரிந்து வந்த நிலையில் தற்போது வந்திதா பான்டே மத்திய அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு கடிதம் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது மத்திய அரசின் இளைஞர் விவகாரத்துறை இயக்குனராக வந்திதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அடுத்த கட்ட உத்தரவு வரும் வரை வந்திதா பான்டே மத்திய அரசு பணியில் நீடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

வந்திதா பான்டே அதிரடி மாற்றத்திற்கு அரசியல் காரணம் எதுவும் இல்லை. அவரே மத்திய அரசு பணிக்கு விண்ணப்பித்துள்ளார். தற்போது அந்த விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்துறை அமைச்சகம் அவரை மத்திய பணிக்கு மாற்றி உள்ளது என காவல்துறை வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சினையை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கா? நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்...