ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ராணுவ வீரர்கள் போல சீருடை அணிந்து வந்த பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 12 சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட செய்தி மிகவும் கொடூரமானது என்றும் இந்த கொடூரமான தாக்குதல் மனிதகுலத்திற்கு எதிரான ஒரு கொடூரமான குற்றம் எனவும் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுல்-சோனியா சிறைக்குச் செல்வார்களா? காங்கிரசுக்கு மிகப்பெரிய நெருக்கடி..! சிக்கியது எப்படி..?

இறந்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், இந்த இழப்பைத் தாங்கும் வலிமையை அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கவும் கடவுளிடம் பிரார்த்திப்பதாகவும், பயங்கரவாதத்திற்கு எதிராக முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது எனவும் கூறியுள்ளது. மேலும்,ஜம்மு காஷ்மீரில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே தவிர இப்போது அறிக்கைகள் பலனளிக்காது என்றும் விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸைப் பார்த்து பாஜகவுக்கு மிரட்சி.. பாஜகவின் பழிவாங்கும் அரசியலை தோலுரித்த டி.ஆர். பாலு!