சமீபத்தில் நடிகை வின்சி அலோசியஸ் தனியார் சேனலுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் நடிகர் ஷைன் டாம் சாக்கோ தன்னிடம் வந்து ஆடை மாற்ற உங்களுக்கு உதவி செய்யட்டுமா என கூறியதாகவும். படப்பிடிப்பு தளத்தில் அவர் போதை மருந்துகளை உட்கொண்டு வருவதாகவும் பெரிய புகார் ஒன்றை கூறினார். இதனை அடுத்து, இதுபற்றி விசாரிக்க அன்சிபா ஹாசன், வினு மோகன் மற்றும் சாராயு மோகன் ஆகிய 3 பேர் கொண்ட கமிட்டி அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இதனை அடுத்து கொச்சியில் உள்ள தனியார் ஹோட்டலில் இரவு 11 மணியளவில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக ரெய்டு செய்தனர். அப்பொழுது அங்கு தனது நண்பர்களுடன் இருந்த நடிகர் ஷைன் டாம் சாக்கோ ஜன்னல் வழியாக எகிறி குதித்து தப்பி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனை அடுத்து போலீசார் அவரிடம் விசாரிக்க சம்மன் அனுப்பிய போது நேரடியாக காவல் நிலையம் சென்று தான் போதை மருந்து உபயோகித்ததை ஒப்பு கொண்டார்.
இதையும் படிங்க: போதையில் கசமுசா செய்ய நினைத்த நடிகர்..! போலீசிடமிருந்து தப்பிக்க ஜன்னல் வழியாக எஸ்கேப்..!

இந்த சூழலில், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு ஷைன் டாம் சாக்கோவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிரைவேற்றி இருந்தனர். இதனை குறித்து செய்தியாளர்களுக்கு சமீபத்தில் பேட்டியளித்த கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் உன்னி கிருஷ்ணன், படப்பிடிப்பில் போதையில் நடிகர் ஒருவர் தனக்கு தொல்லை கொடுத்ததாக நடிகை வின்சி அலோசியஸ் கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தார்.

நடிகரின் பெயரை தயவு செய்து வெளியிடவேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். அவரிடம் சட்டத்தின்படி உள்புகார்கள் குழுவில் புகார் அளிக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, படப்பிடிப்பு தளத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க நடிகர் ஷைன் டாம் சாக்கோவையும் அழைத்தோம். அப்பொழுது வந்த அவர் தான் போதைப்பொருள் பயன்படுத்துவதாக எங்களிடம் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்துடன், கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு நேரடியாக விவாதித்தது. அப்பொழுது போதைப்பொருள்களை பயன்படுத்துபவர்களுடன் நாங்கள் நடிக்க ஒத்துழைக்க மாட்டோம். ஏற்கனவே போதைப் பொருட்களுடன் பிடிபட்ட ஒப்பனை கலைஞர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இப்படி இருக்க, நடிகர் ஷைன் டாம் சாக்கோவை மட்டும் எப்படி தண்டிக்காமல் இருக்க முடியும். ஆதலால் அவரை திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்ய கேரள திரைப்பட ஊழியர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. இந்த முடிவுக்கு பிறகு நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது தவறுக்கு மன்னிப்பு கேட்டு, இன்னொரு வாய்ப்பு தருமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நாங்கள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், அவரை மீண்டும் நடிக்க அனுமதிக்கலாமா வேண்டாமா என தற்போது உள் புகார்கள் குழு அறிக்கைக்கு பின் பார்த்துக்கொள்ளலாம் என நாங்கள் காத்திருக்கிறோம். என தெரிவித்தார்.

இப்படி இருக்க, இவர்களது பிரச்சனைகளை விசாரிகத்து முடிவு செய்ய நினைத்த "உள் புகார் குழு" இருவரையும் நேரில் அழைத்தது. அப்போது நடிகை வின்சி அலோசியஸ் தனியாகவும், நடிகர் ஷைன் டாம் சாக்கோ தனது குடும்பத்தினருடனும் வந்தார். அப்போது பேசிய டாம், "உண்மையில் நான் எந்த வித உள்நோக்கத்துடனும் அப்படி பேசவில்லை உங்களிடம் கேட்கவுமில்லை. நான் பேசும் பாணியே அப்படி தான்.
உங்களிடம் மட்டும் அல்ல நான் யாரிடம் பழகினாலும் உரிமை எடுத்து தான் பேசுவேன். இனிமேல் இப்படி எந்தவித தவறுகளும் நடக்காமல் பார்த்து கொள்கிறேன். மனதார எனது தவறுக்கு வருந்துகிறேன். மேலும் நடிகை வின்சி அலோசியஸிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்". என தனது மன்னிப்பை கேட்டு கொண்டு அங்கிருந்து சென்றார்.

இப்படி அவர் மன்னிப்பு கேட்டு உள்ளதால் அவர் மீது விதிக்கப்பட்ட நடிப்பின் தடையை விளக்குமா கேரள சினிமா உள்கூட்டமைப்பு என மக்கள் ஆவலுடன் காத்து கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் இருந்து அவர் தப்பித்தாலும் போதை பொருள் வழக்கில் அவர் சிக்கியது சிக்கியதுதான் என கூறிவருகின்றனர் சினிமா பிரபலங்கள்.
இதையும் படிங்க: ஹிட் கொடுக்கும் இயக்குனர் லிஸ்டில் 'SK'..! பிரம்மாண்ட கதையில் இணையும் கூட்டணி..!