அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன், மகன் அருண் நேரு சம்மந்தப்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. அமலாக்கத்துறை எதற்காக வந்து போனார்கள்? என்ன வழக்கு என்பது தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
2013ல் ஒரு நிறுவனம் அவர்கள் 30 கோடி ரூபாய் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன் வாங்குறார்கள்.
எதற்காக இந்தக் கடன் என்றால் ஒரு 100 மெகாவாட் வின்ட்மில் பிராஜெக்ட் நாங்க திருப்பூரில் திறக்கப்போகிறோம் எனச் சொல்லி கடனை வாங்கி, இந்தக் கடனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி இருக்கிறார்கள். இது தான் வழக்குடையே சாராம்சம். ஆனால் இதில் முக்கியமாக அந்த பணம் இளையராஜா, இன்னொருவர் பேர் அறிவுநிதி. இவர்கள் இருவரும் அண்ணன் -தம்பி. இவர்கள் இரண்டு பேரும் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் ட்ரூடாம் ஏபிசி இந்தியா பிரைவெட் லிமிடெட் என்கிற நிறுவனத்தின் மூலம் 30 கோடி ரூபாய் வாங்குகிறார்கள்.

அந்த பணத்தை அப்படியே ஒரு மூன்று நிறுவனங்களுக்கு ட்ராண்ஸ்பர் செய்கிறார்கள். அந்த மூன்றுமே ஷெல் நிறுவனங்களுக்குச் சொந்தமானது. அதனை ஐ ஓ பி வங்கி ட்ரான்ஸ்ஃபர் செய்ததன் மூலம் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் தான் சிபிஐயில் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: கே.என்.நேரு வீட்டில் டாஸ்மாக் பணம்..? சிக்கப்போகும் குறுநில மன்னர்கள்- ED வைத்த டார்கெட்..!
எக்கோடாம் பவர் பிரைவெட் லிமிடெட்டுக்கு 13.5 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். இந்த எக்கோடாம் பவர் பிரைவெட் லிமிடெட் இருக்கிறதா? இல்லையா? இது தான் முக்கியமான நிறுவனம் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு பெயரில் இருக்கிறது.
இந்த மூன்று நிறுவனங்களும் இந்த பணத்தை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் என் ரவிச்சந்திரனுடைய நிறுவனமான True Value Homes அனுப்பி இருக்கிறார்கள். அந்த முப்பது கோடி ரூபாய் நூறு மெகாவாட் வின்மில் பவர் பராஜெக்ட்டுக்கு கடனை வாங்கி விட்டு அந்த பணத்தை மூன்று செல் நிறுவனங்கள் வழியாக True Value Homesக்கு அந்த முப்பது கோடி பணம் அனுப்பி இருக்கிறார்கள்.

இப்போ இந்த TRUEDOM APC INDIA PRIVATE LIMITED நிறுவனம் ஏதோ வேறொருவர் அல்ல. TRUE VALUE HOMES- கும் சம்மந்தமே இல்லாத நிறுவனம் எல்லாம் இல்லை. அதாவது True Value Homes தான் இதை இந்த நிறுவனத்தையும் மேலாண்மை செய்து வருகிறது. இந்த 30 கோடி லோன் வாங்கிய நிறுவனம் ரவிச்சந்திரனுடையது. ஒரு கம்பனி ஆரம்பித்து அந்த கம்பனியில் வந்து பணத்தை வாங்கிவிட்டு செல் நிறுவனம் மூலமாக True Value Homes-க்கு கொண்டு வந்துள்ளனர்.
பெரம்பூர் எம்பியாக இருப்பதற்கு கே.என்.அருணுக்கு தகுதியே இல்லை. ஏனென்றால் அவர் ஒரு மோசடி செய்திருக்கிறார். 13.5 கோடி ரூபாய் அவர் ஒரு செல் நிறுவனத்தின் வழியாக அனுப்பி இருக்கிறார்.
மீதி எட்டு கோடி ரூபாய் தான் வேறொருவர் பெயரில் கட்டி இருக்கிறார்கள். இந்த வின்ட்மில் திட்டத்திற்கு என கடன் வாங்கிக்கொண்டு இவர்கள் True Value Homes ரியல் எஸ்டடேட் கம்பனிக்கு எடுத்து போய் பணத்தை மோசடிசெய்திருக்கிறார்கள்.

அதனால்தான் நேற்றுக்கு ரவிச்சந்திரனை அழைத்துச்சென்று அமலாக்கத்துறை நிறைய விஷயங்களை விசாரிச்சிருக்கிறார்கள். இது ஒரு தொடக்கம்தான். அப்போது கடன் வாங்கியவர்களின் சொத்துக்களையும் விசாரித்து இருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று ஐஓபி சொல்லியிருக்கிறார்கள். இளையராஜாவுக்கு 17.5 கோடி ரூபாய் இருக்கிறது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மொத்தம் 355 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. ஆனால் 30 கோடி ரூபாயை இவர்கள் கட்ட மறுக்கிறார்கள். இபோது வங்கிக்கு 41.92 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டி இருக்கிறது. True Value Homes India Pvt Ltd 5.8 கோடி ரூபாய் செலுத்த வேண்டி இருக்கிறது. Tawas Construction Pvt Ltd 4.71 கோடி திருப்பி செலுத்த வேண்டும். இதன் அடிப்படையாகக் கொண்டுதான் சிபிஐ வழக்குத் தொடுத்து இருக்கிறது.

அந்த வழக்கு 2021ல் பிரிவு 120 பி கூட்டு சதி. 420 மோசடி.2018ல் சட்டதிருத்தம் வருவதற்கு முன்பாக நடந்திருப்பதால், அந்த சட்டத்தின் படி 131D என்பது குற்றவியல் தவறான நடத்தை. இப்படி ஒரு அதிகாரத்தை துஷ்பரயகம் செய்து, செல்வாக்கை தவறாக பயன்படுத்தி ஆதாயம் அடைவதற்காக இந்த வேலையை செய்திருக்கார்கள். ஏற்கனவே பல கோடி ரூபாய் சொத்துக்களை ரவிச்சந்திரன் தொடர்ந்து வாங்கிப் போட்டுக்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: ED வளையத்தில் கே.என்.நேருவின் தம்பி: கையோடு அழைத்துச் சென்ற அதிகாரிகளால் பரபரப்பு.?