பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலமாக அதிக வெளிச்சம் பெற துவங்கி உள்ளன. இத்தகைய குற்றங்களுக்கு போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. போதைப்பொருள் மற்றும் மதுபோதை காரணமாகவே இத்தகைய குற்றங்கள் அதிகரித்து வருவதாகவே எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மதுப்பழக்கம் அதிகரித்ததன் விழைவாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதாகவும், போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பதால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் அருகே இரண்டு குழந்தைகளின் தந்தை மது போதையில் 7 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள தாய் மாமன் வீட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் தங்கி அங்கு உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். குழந்தையின் தாய் மாமாவுக்கு அவருக்கு திருமணமாகியும் குழந்தை இல்லாத காரணத்தினால், தனது தங்கச்சியின் மகளை சிறு வயதில் இருந்து வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்க வைத்து வருகிறார். சம்பவத்தன்று தாய்மாமாவும், அவரது மனைவி இருவரும் கூலி வேலைக்குச் சென்ற உள்ளனர். இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுமிக்கு செல்போனில் டார்ச்சர்.. போட்டோவை மார்பிங் செய்து மிரட்டல்.. கம்பி எண்ணும் இளைஞர்கள்..!

இந்த நிலையில் வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது, மது போதையில் அங்கு வந்த ஆம்பூர் பெரிய காலனி தெரு பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்பவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். மேலும் இதை வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனை அடுத்து சிறுமி வீட்டில் இது குறித்து சொல்லாமல் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் அன்று இரவு சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனே இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் கேட்ட போது, சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை கண்ணீர் மல்க தெரிவித்து உள்ளார். சிறுமியிடம் அத்துமீறிய விக்னேஷிற்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் விக்னேஷை அன்று இரவே பிடித்து கட்டி வைத்துனர். சிறுமியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மேலும் இது குறித்து சிறுமியின் தாய் திருவாரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விக்னேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இரண்டு குழந்தைகளின் தந்தை, வீட்டில் தனியாக இருந்த சிறுமியை மதுபோதையில் பாலியல் வன் கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: ‘பெரிய நகரில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது இயல்புதான்’.. கர்நாடக அமைச்சர் பேச்சால் சர்ச்சை..!