2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து பெங்களூர் அணியின் தொடக்க வீரர்களாக சால்ட் மற்றும் கோலி களமிறங்கினர். சால்ட் 26 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரை தொடர்ந்து வந்த படிக்கல் - கோலி கூட்டணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. விராட் கோலி அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசினார். இதனால் 10 ஓவர்களில் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 83 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதன்பின் 12வது ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசிய விராட் கோலி, 32 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசினார்.

இதன்பின் ரியான் பராக் வீசிய 14வது ஓவரில் படிக்கல் மற்றும் விராட் கோலி சிக்ஸ் அடிக்க, ஆர்சிபி அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதன்பின் துஷார் தேஷ்பாண்டே வீசிய 15வது ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 22 ரன்கள் விளாசப்பட்டது. அப்போது ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழக்க, சந்தீப் சர்மா வீசிய 17வது ஓவரில் படிக்கல் 50 ரன்களிலும், ரஜத் பட்டிதார் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த டிம் டேவிட் - ஜித்தேஷ் சர்மா கூட்டணி 18வது ஓவரில் 14 ரன்கள் குவித்தது.
இதையும் படிங்க: சொந்த மண்ணில் படுமோசமாக விளையாடிய SRH... அதிரடி பேட்டிங்கால் MI அபார வெற்றி!!

தொடர்ந்து சந்தீப் சர்மா வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவரை வீச ஆர்ச்சர் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. 206 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களமிறங்கினர். அதிரடியாக ஆடிய வைபவ் சூர்யவன்ஷி 16 ரன்களிலும், ஜெய்ஸ்வால் 19 பந்துகளில் 49 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன்பின் வந்த ரியான் பராக் - நிதிஷ் ராணா கூட்டணி அபாரமாக ஆடியது. அப்போது க்ருனால் பாண்டியா பவுலிங்கில் ரியான் பராக் 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த நித்தீஸ் ரானா 28 ரன்களில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஹெட்மயரும் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ராஜஸ்தான் அணி தடுமாறியது. அப்போது வந்த துருவ் ஜுரெல் 34 பந்துகளில் 47 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ஆர்ச்சர் டக் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து தூபே 12 ரன்களிலும் ஹசரங்கா 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 194 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதன் மூலம் 11 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பேட்டிங்கில் தொடக்கம் முதலே தடுமாற்றம்... சொந்த மண்ணில் வைத்து LSG-ஐ தோற்கடித்த DC!!