ஆற்றுப்படுகைப் பகுதிகள் அருகே வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் வரும் ஆபத்து, அது வளரும் ஆபத்தும் அதிகம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) எச்சரிக்கை செய்துள்ளது. 2024ம் ஆண்டு இது தொடர்பாக ஆய்வு நடத்தி, “இந்தியன் அகாடெமி ஆப் சயின்சஸ் ஆன் ஹியூமன் ஹெல்த்” என்ற தலைப்பில் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. இரும்பு, ஈயம், அலுமினியம் தாதுக்கள் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அளவைவிட அதிகமாக இருப்பதால், புற்றுநோய் வருவதற்கான காரணமாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எழுத்துபூர்வமாக அறிக்கை அளித்தார். அப்போது அவர் இது தொடர்பாக கூறியதாவது:
இதையும் படிங்க: எனக்காக இதை செய்யுங்க விஜய்! மரணப்படுக்கையில் கோரிக்கை வைத்த ஷிகான் ஹூசைனி!
புற்றுநோய் சிகிச்சைக்கான பல்வேறு மேம்பட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. புற்றுநோய் சிகிச்சை மையத்தை மேம்படுத்துதல், சிகிச்சை எளிமையாக கிடைத்தல் ஆகியவற்றுக்காக புற்றுநோய் பாதுகாப்பு வசதிகள் திட்டத்தை பலப்படுத்தியுள்ளோம்.
இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய்க்கு மேம்பட்ட சிகிச்சை, கண்டறிதல் முறைக்காக 19 மாநிலங்களில் உள்ள புற்றுநோய் சிகிச்சை மையங்களுக்கு நவீன கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. கொல்கத்தாவில் உள்ள சித்தரஞ்சன் புற்றுநோய் மையத்துக்கும் மேம்பட் சிகிச்சை வழங்க கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் புற்றுநோய் சிகிச்சை வசதிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த மருத்துவமனைகளில் புற்றுநோய் கண்டறிதல், மருந்துகள் வழங்குதல், சிகிச்சை, அறுவை சிகிச்சை செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனைகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சையை இலவசமாகவோ அல்லது ஏழைகளுக்கு மானியத்திலோ வழங்கும். ஆயுஷ்மான் பாரத்-பிராதன் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் காப்பீடு ஒரு குடும்பத்துக்கு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஏறக்குறைய 12.37 கோடி குடும்பங்கள் இணைந்துள்ளன. இதில் 40% விளிம்புநிலையில் உள்ள மக்கள்.
இந்தத் திட்டத்தில் 70 வயது அதற்கு மேற்பட்ட முதியோரும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கும் இந்த காப்பீடு நீட்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக பிராதன் மந்திரி பாரதிய ஜன்அவுஸாதி பாரியோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக நாடுமுழுவதும் 15057 மருந்துக்கடைகள் திறக்கப்பட்டன. இந்த மருந்தகங்கள் மூலம் மக்களுக்கு மிகக்குறைந்த விலையில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தில் 2047 வகையான மருந்துகள், 300 சிகிச்சைக் கருவிகள், 87 வகையான புற்றுநோய்க் சிகிச்சைக்கான பொருட்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கும்.

சுகாதாரத்துறை அமைச்சகம் அம்ரித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்தவிலையில் மருந்துகள் வழங்குதல்,இதயநோய் உள்ளிட்ட பிற நோய்களுக்கும் குறைந்தவிலையில் மருந்து, மாத்திரைகள் வழங்குவதாகும். 2025,ஜனவரி 31ம் தேதிவரை 222 அம்ரித் மருந்தகங்கள் 29 மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ளன. 6500 வகையான மருந்துகள், புற்று நோய்ககும் தேவையான மருந்துகள் சந்தை விலையில் இருந்து 50% குறைவாக விற்கப்படுகின்றன.
இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதை ஊசிகள் பயன்படுத்திய இளைஞர்கள்.. கொத்தாக அள்ளிய போலீசார்!