பசுமை தாயகத்தின் தலைவர் சௌமி அன்புமணி சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18ம் படியை பார்த்த நொடியே மனம் உருகி கண்ணீர் வடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் இந்தியாவில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆன்மீகத் தலங்களில் ஒன்றாக உள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பிரபலங்கள் படையெடுக்கும் கோயிலாக சபரிமலை உள்ளது. இதில் சிலர் மாலை அணிந்து விரதம் இருந்து 18ம் படியை தொட்டு வணங்கி, ஐயப்பனை தரிசிப்பது உண்டு. சிலர் மாலை அணியாமல், சபரிமலைக்குச் சென்று அங்கு மாலை அணிந்து ஐயப்பனை தரிக்கும் வழக்கமும் உள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை மது, சூது போன்ற தீய பழக்க வழக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாலை அணிவித்து 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருக்க வைத்து, சபரிமலைக்கு சென்று வர அறிவுறுத்தும் பழக்கம் இன்றுவரை நடைமுறையில் உள்ளது. அப்படி சென்று வந்தவர்கள் பெரும்பாலும் எந்த தீய பழக்கத்தையும் தொடருவது கிடையாது. காரணம் 48 நாட்களுக்கு அவர்கள் கடுமையாக மேற்கொள்ளும் ஐயப்ப விரதம், அவர்களை அந்த பழக்கத்தில் இருந்து விலக்க உதவுகிறது.

இதையும் படிங்க: சேகர்பாபு அண்ணா… இதுக்கு என்ன ஸ்கிரிப்ட் வைச்சிருக்கீங்க..? காண்டாக்கும் அண்ணாமலை..!
இப்படி ஆன்மீக சிறப்பம்சங்கள் பல கொண்ட சபரிமலை ஐயப்பனை தமிழ்நாட்டின் முக்கிய கட்சியாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சியின், துணை அமைப்பான பசுமை தாயகத்தில் தலைவராக இருக்கக்கூடிய சௌமியா அன்புமணி மனமுருக தரிசித்துள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சென்று வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை கோயில் நடை திறக்கப்படுவது வழக்கமாக உள்ளது.

அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ஐயப்பன் கோயிலில் இருந்து இருமுடி கட்டிக்கொண்ட செளமியா அன்புமணி, சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்துள்ளார். 18ம் படிக்கு முன்பு நிற்கையில் ஐயப்பனை காணப்போகிறோம் என்ற ஆனந்தத்தில் செளமியா அன்புமணி கண்ணீர் வடித்து மனமுருகும் காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைப்பதாக அமைந்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ள அவர், "சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா " என பதிவிட்டுள்ளார்.
சபரிமலையில், 18-ஆம் படியேறி சுவாமி ஐயப்பன் தரிசனம் செய்ய வேண்டும் என்பது என் சிறு வயது கனவு. 50 ஆண்டுகால வேண்டுதல் நிறைவேறியது. சுவாமியே சரணம் ஐயப்பா..!🙏#Sabarimala | #ayyappaswamy | #ayyappadevotional pic.twitter.com/aRct5U3umM
— Sowmiya Anbumani (@Sowmiyanbumani) March 18, 2025
இதையும் படிங்க: ஓய்வு பெற்ற காவல் அதிகாரி வெட்டிக்கொலை.. சட்டம் - ஒழுங்கு எங்கே? என அன்புமணி கேள்வி..!