சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் மின்சார துறை தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது: டாஸ்மாக்கில் பணிபுரியும் 23,629 பேருக்கு 2000 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்படும். டாஸ்மாக்கில் பணிபுரியும் 23 ஆயிரத்து 567 மேற்பார்வையாளர்கள் 2,426 உதவி விற்பனையாளர்ளுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும்.

14, 636 விற்பனையாளர்களுக்கு ரூ.2000 ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் கணக்கிட்டு ஊதிய உயர்வு வழங்கப்படும். டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க ஆண்டொன்றுக்கு 64.08 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். மது போதைப்பொருள் தீர்வு குறித்து 9,315 விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. 2016 - 21 அதிமுக ஆட்சியிலும் டாஸ்மாக்கில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் மட்டும்தான் கூடுதலாக பத்து ரூபாய் வசூலிக்கப்படுவதாக பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.டாஸ்மாக் வருமானத்தில் தான் இந்த ஆட்சி செயல்படுவது போல் பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
இதையும் படிங்க: கூட்டணி மட்டுமே.. கூட்டணி ஆட்சி இல்லை..! பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த இபிஎஸ் பேட்டி..!

நான்கு ஆண்டுகளில் பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வசூலித்தவர்களிடம் 6.79 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆண்டு 50 ஆயிரம் விவசாயம் மின் இணைப்புகள் வழங்கப்படும். மின்சாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். 1,192 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும். தேரோடும் வீதிகளில் உள்ள மேல்நிலை மின்பாதைகள் 56.89 கோடியில் புதைவடங்களாக மாற்றப்படும். மன்னார்குடி, மலை கோட்டை, சிதம்பரம், சமயபுரம், உத்தரகோசமங்கை, மேல்மலையனூர், காளையார் கோவில், திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மேல்நிலை மின்பாதைகள் புதைவடங்களாக மாற்றப்படும்.

தமிழ்நாடு மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 215 கோடியில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். 26 துணை மின் நிலையங்களில் 55 கோடியில் மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி, மேட்டூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் 500 கோடியில் மின் உற்பத்தி மூலதன பணி மேற்கொள்ளப்படும். 25 துணை மின் நிலையங்களில் 94 கோடியில் மின்மாற்றிகளின் திறன் மேம்படுத்தப்படும். மின்வாரிய ஊழியர்கள் அனைவருக்கும் பயிற்சி மையங்கள் மூலமாக பாதுகாப்பு உறுதி செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும். மின் பகிர்மான கழகத்தில் ஏ ஐ அடிப்படையில் தரவு பகுப்பாய்வு பிரிவு உருவாக்கப்படும். இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜி வழக்கு; அவகாசம் கேட்ட அமலாக்கத்துறை... வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!!