தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2025 2026 எல்லாருக்கும் எல்லாம் கோடைக்கால பயிர் திட்டம் என்ற புதிய திட்டத்தை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கோடைக்கால பயிர் திட்டம்:
கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிக வெப்பம் மற்றும் குறைவான மழை போன்ற காரணங்களால் சாகுபடி பரப்பு குறைந்து காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற வேளாண் விலைப்பொருட்களின் சந்தை விலை அதிகரிக்கிறது எனத் தெரிவித்த வேளாண் துறை அமைச்சர், எனவே கோடை காலத்தில் குறைந்த நீரில் தேவையுள்ள குறுகிய கால பயிர் வகைகளை 71,600 ஏக்கரிலும், எண்ணெய் வித்துகளான நிலக்கடலை 74,000 ஏக்கரிலும், எள் 3,300 ஏக்கரிலும், தக்காளி வெண்டை, வெங்காயம், கத்திரி, மிளகாய், கீரைகள் போன்ற முக்கிய பயிர்களான முக்கிய காய்கறி பயிர்கள் 57, 300 ஏக்கரிலும் சாகுபடி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும் என அறிவித்தார்.
இதையும் படிங்க: இவர்களுக்கு 75% மானியம்... வேளாண் பட்ஜெட்டில் வெளியான சூப்பர் அறிவிப்பு...!

இதன் மூலமாக உழவர்களுக்கு உரிய விலை கிடைப்பதுடன், நுகர்வர்களுக்கு நியாயமான விலையில் காய்கறிகள் கிடைக்கும் என்றும், இதுக்கான ரூபாய் 10 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய படும் என்றும் பேரவையில் அறிவித்தார்.
நுண்ணீர் பாசன திட்டம்:
நீர் ஆதாரத்தை சிக்கலமாக பயன்படுத்தி நீர் பயன்பாட்டு திறனை 40 முதல் 60 சதவீதம் வரை அதிகரிக்க சொட்டு நீர் தெளிப்பு பாசனங்களை உள்ளடக்கிய நுண்ணீர் பாசன திட்டம் ஊக்குவிக்கப்படும் என அறிவித்த அமைச்சர், இதன் மூலம் உர பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கப்பட்டு உரங்கள் வீணாவது தடுக்கப்படுவதோடு, களைகள் கட்டுப்படுத்தப்பட்டு பணியாட்களின் தேவையும் கணிசமாக குறைந்து உற்பத்தி அதிகரிக்கிறது என்றார்.

இதற்காக 2025-26 ஆம் ஆண்டில் வேளான் பட்ஜெட்டில் ஏக்கருக்கு 3 லட்சம் வீதம் 1,168 கோடி நிதி ஒதுக்கீட்டில் 13 லட்சம் உழவர்கள் பயன்பெறும் வகையில் நுண்ணீர் பாசன அமைப்புகள் நிறுவப்படும் என அறிவித்தார்.
பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி ஊக்குவிப்பு:
பாரம்பரிய காய்கறிகளை உண்பதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உழவர்களின் பாரம்பரிய காய்கறி ரகங்களை பெரும்பான்மையாக சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தில் மணப்பாறை கத்திரி, சில்லுக்கொடி கத்திரி, குலசை கத்திரி பெரிய கொளம்பட்டி கத்திரி, தருவை தக்காளி, மஞ்சள் குடம் தக்காளி, ஆனைக்கொம்பன் வெண்டை, சிவப்பு வெண்டை, சிறகு அவரை, மூக்குத்தி அவரை போன்ற பல்வேறு வகையான பாரம்பரிய காய்கறி ரகங்களை சாகுபடி செய்வதை ஊக்குவிக்க ரூபாய் 2 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.
இதன் மூலம் 2,500 ஏக்கரில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்யும் 7000 உழவர்கள் பயனடைவார்கள் என அறிவித்தார்.
வெங்காய விலையேற்றம்:

அக்டோபர் டிசம்பர் மாதங்களில் வெங்காயத்தின் உற்பத்தி குறைவதால் வெங்காயத்தின் விலை அதிகமாகிறது. இந்த இடைவெளியை குறைப்பதற்காக வெங்காயத்தினை சேமித்து வைத்து மகசூல் குறையும் நேரங்களில் விற்பனை செய்வதற்காக 36,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய சேமிப்பு கடன்கள் கூடங்கள் அமைக்க மானியம் வழங்க ரூபாய் 18 கோடி மத்திய மாநில நிதி ஒதுக்கீட்டில் செய்யப்படும். இத்திட்டத்தில் ஆயிரம் உழவர்கள் பயனடைவர்.
மலர்கள் சாகுபடி:

காய்கறிகள், பழங்கள் சாகுபடி போலவே ஆண்டு முழுவதும் சீரான வருவாய் கொடுப்பது மலர் சாகுபடி. தினசரி மலர்களை பறித்து விற்பனை செய்வதன் மூலம் நிலையான தொடர் வருவாய் ஈட்ட முடியும். இதனை கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மலர்கள் சாகுபடி செய்யும் உறவுகளுக்கு மானியம் வழங்க 8 கோடியே 51 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதன் மூலம் 6,600 ஏக்கரில் மலர்கள் சாகுபடி செய்யும் சுமார் 9,000 உழவர்கள் பயன்பெறுவார்கள் என்றார்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயிகளுக்கு இன்பமயமான செய்தி... வேளாண் பட்ஜெட்டில் இதை கவனிச்சீங்களா?