திமுக ஆட்சியின் மீது அமைச்சர்களுக்கும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக எம்.எல்.ஏவும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலக வளாகத்தில் வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத்துக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக பகிரங்கமாக சபையில் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, ‘டைடல் பார்க்’ எனப்படும் தொழில்நுட்ப பூங்காக்கள் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இல்லாமல், தொழில் துறையின் கீழ் இருப்பது ஓர் அசாதாரணமான நிலை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் எந்தெந்தத் துறைகள் தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்தால் அந்தத் துறை மேம்படுமோ அது நடைபெறவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், பழனிவேல் தியாகராஜன் ஏதோ மன வருத்தத்தில் இருக்கிறார் என்பதும் தெரிகிறது. நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஏன் மாற்றப்பட்டார்? அவர் செய்த தவறுதான் என்ன? அவருக்கு பெயரளவில் ஓர் அமைச்சகத்தைக் ஒதுக்கி, அதில் முறையான அதிகாரமோ, தேவைப்படக்கூடிய நிதியோ ஒதுக்கவில்லை என்றால், அது அந்த அமைச்சருக்கான தண்டனை அல்லவா?
இதையும் படிங்க: பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்.. நாளை நமதே.. நம்பிக்கை ஊட்டும் விஜய்!!

தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை உருவாக்குதல், அவற்றை மேம்படுத்துதல் போன்ற வாய்ப்புகள் தன்னிடத்தில் இல்லாததால் பழனிவேல் தியாகராஜன் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டுகிறார். அந்தவகையில் திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு மட்டுமல்ல; அமைச்சர்களுக்கும் அதிருப்தி இருக்கிறது" என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கையாலாகாத திமுக அரசு.. எப்பவுமே தப்ப மறைக்க தான் பார்க்குது.. மூக்குடைத்த அண்ணாமலை..!