தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. குறிப்பாக பாகிஸ்தான் உடனான வாகா எல்லை உடனடியாக மூடப்படும் என அதிரடியாக அறிவித்தது. பாகிஸ்தானியர்களையும் இந்தியாவை விட்டு வெளியேற கூறி விட்டனர்.

இந்த நிலையில் இந்தியா அறிவிப்பை தொடர்ந்து, இந்தியாவுடனான வாகா எல்லை மூடப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாது இந்திய வான்வழி விமானங்கள் பாகிஸ்தான் வழியாக செல்லவும் தடை விதித்தது.இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வழியை பயன்படுத்த கூடாது என்றும் கூறியுள்ளது. வாகா எல்லை மூடப்பட்டதால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடந்து வந்த வர்த்தகம் முற்றிலுமாக முடங்கியது.
இதையும் படிங்க: தீவிரவாதிகள் எப்படி எல்லை தாண்டினார்கள் ? அசாதுதின் ஒவைசி சந்தேகம்...
இதையும் படிங்க: சீண்டிய பாக்.! ஏவுகணை சோதனையில் அரக்கனை இறக்கிய இந்தியா...!