2025 ஐபிஎல் சீசனில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை சிஎஸ்கே விளையாடிய 7 போட்டிகளில் 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஒவ்வொரு போட்டியின் போதும் அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. சிஎஸ்கே 5 போட்டிகளில் தோல்வியடைந்ததால் இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய சூழல் நிலவி வருகிறது. தோனி கேப்டன்சியில் அது சாத்தியம் என ஒருபுறம் ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தோனி குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது. நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: சேப்பாக்கம் பிட்ச் சரியில்லை... சர்ச்சையான தோனியின் பேட்டி!!

இந்த போட்டிக்கு பிறகு பேசிய மைக்கேல் கிளார்க், தோனி தான் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர். அவரது கேப்டன்சி துல்லியமாக இருந்தது. தோனி எப்போது ஒரு நகரத்தில் இருந்தாலும் அங்கு மிகவும் சத்தமாக இருக்கும். அவரது விக்கெட் கீப்பிங் எனக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும் ஏற்படுத்தவில்லை. இதற்கு முன்பும் இதை சொல்லி இருக்கிறேன். இப்போதும் அவர் உலகின் மிகச்சிறந்த கீப்பர்.
தோனி மிக நீண்ட காலமாக ஒரே மாதிரியாக விக்கெட் கீப்பிங் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அது மிகவும் அற்புதமானது. அவரது கேப்டன்சியும் துல்லியமாக இருந்தது. மிடில் ஓவர்களில் இரண்டு ஸ்பின்னர்களையும் பயன்படுத்திய விதம், ஓவர்களை வேகமாக வீசி முடித்தது அதன் மூலம் எதிரணிக்கு அழுத்தம் கொடுத்தது என அவரது கேப்டன்சி சரியாக இருந்தது.

நடந்த சிறந்த விஷயம் தோனியின் கேப்டன்சி தான். அவர் சூழ்நிலையை சரியாக புரிந்து கொண்டார். அதற்கு ஏற்ப மாற்றங்களை செய்தார். அவரது சுழற் பந்துவீச்சாளர்களை வரிசையாக வீச வைத்தார். இதைத்தான் தோனி தனது கிரிக்கெட் வாழ்வு முழுவதும் செய்து இருக்கிறார்.
சுழற் பந்துவீச்சாளர்களை தோனி அழைத்தவுடன் அவர்கள் வேகமாக பந்து வீசினார்கள். அவர்கள் போட்டியின் வேகத்தை மாற்றினார்கள். பிட்சை தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டார்கள். விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். ஒரு கேப்டனாக களத்தில் தோனி செயல்பட்ட விதம்தான் இந்த போட்டியை நமக்கு சிறப்பாக விவரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: லக்னோ அணியை கதறவிட்ட தோனி.. புத்தாண்டுக்கு வெற்றியை பரிசாக கொடுத்த சிஎஸ்கே!!