சிஏஜி அறிக்கை, டெல்லியில் மது கொள்கை, வாகன மாசு பாடு, பொது சுகாதாரம் மற்றும் 2017 - 18 முதல் 2020 - 21 வரையிலான அரசு துறைகளில் செயல் திறன் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய 14 தணிக்கைகளில் ஒன்றாகும் என்றும் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜய் மக்கான் டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"தலைமை கணக்கு தணிக்கையாளர் அமைப்பு (சிஏஜி) 14 அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு மீது பல்வேறு ஊழல் புகார்கள் கூறப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: ‘மான்போல, இப்போது தீவிரவாதம்’! டெல்லி முதல்வர் அதிசியை வம்பிழுக்கும் பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி
"இந்த அறிக்கைகளை சட்டப் பேரவையில் வெளியிடுவதை அரவிந்த் கெஜ்ரிவால் தடுக்கிறார்" என துணைநிலை ஆளுநரும், "துணைநிலை ஆளுநர் தடுக்கிறார்" என கெஜ்ரிவாலும் பரஸ்பரம் குற்றம்சாட்டுகின்றனர்.
14-வது சிஏஜி அறிக்கையில் சுகாதாரத் துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதில் 3 மருத்துவமனைகளில் டெண்டர் தொகைக்கும் கூடுதலாக ரூ.382 கோடி செலவிடப்பட்டதாகவும் இதில் கெஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அவர் விளக்கம் அளிக்க வேண்டும். இதனால்தான் சிஏஜி அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்ய கெஜ்ரிவால் முட்டுக்கட்டை போட்டுள்ளார்'. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தகவலை வெளியிட்டுள்ள இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை "சிஏஜி அறிக்கைகள் என்னும் பொது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாததால் அதில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் குறித்து சுதந்திரமாக சரி பார்க்க முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

ஆம் ஆத்மி பதிலடி
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாஜகவின் குற்றச்சாட்டுகளையே காங்கிரசும் எதிரொலிப்பதாக" பதிலடி கொடுத்துள்ளது.
"பாஜக ஆளும் மாநிலங்களில் பரவலான ஊழலை அம்பலப்படுத்தும் அதிகாரப்பூர்வ சிஏஜி அறிக்கைகள் குறித்து காங்கிரஸ் கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறது" இருக்கிறது என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு...